
இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் சருமத்தை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. இதனால் சருமம் பிரச்சனைகள் ஏற்பட்டு சருமத்தின் பொலிவு குறைய செய்கிறது. எங்காவது வெளியே ஒரு நல்ல நிகழ்வுக்கு செல்லும்போதுதான் இதை கவனிக்கிறோம். இதுபோன்ற சமயங்களில் பெண்கள் தங்கள் சரும பளபளப்பை இழப்பதாக கூறுகின்றனர். ஆனால் இதன்பிறகு இதுபோன்ற பிரச்சனைகள் பற்றி கவலை வேண்டாம். உங்கள் முகத்தில் உடனடி பளபளப்பு வேண்டுமெனில் இந்த உதவிக்குறிப்புகளை முயற்சி செய்யலாம். இந்த குறிப்புகள் உடனடி பளபளப்பைக் கொண்டுவருவதற்கு உதவியாக இருக்கும். மேலும் இந்த வைத்தியம் அனைத்தையும் வீட்டிலேயே செய்யலாம்.
மேலும் படிக்க: மழைக்காலத்தில் நகங்களை அழகாக பராமரிப்பது எப்படி என தெரிந்து கொள்வோம்

உடனடி பொலிவைப் பெற உங்கள் முகத்தில் தயிர் தடவலாம். தயிர் பல குணங்கள் நிறைந்தது மற்றும் இதில் இருக்கும் பண்புகள் அனைத்தும் முகத்திற்கு நன்மை பயக்கும். கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின்கள் தயிரில் காணப்படுகின்றன. மேலும் இந்த பண்புகள் அனைத்தும் முகத்திற்கு பளபளப்பைக் கொண்டுவரும்.

முகத்தில் உடனடி பளபளப்பிற்கு முல்தானி மெட்டியையும் பயன்படுத்தலாம். முல்தானி மிட்டியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன மற்றும் இந்த பண்புகள் அனைத்தும் தோல் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
குறிப்பு - எந்தவொரு தீர்வையும் முயற்சிக்கும் முன் நீங்கள் நிபுணர் ஆலோசனையைப் பெற வேண்டும். மேலும், ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்யவும்.
மேலும் படிக்க: அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு முகப் பொலிவை பெற தயிர் ஃபேஸ் பேக்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com