வெள்ளை பூசணி ஜூஸில் வைட்டமின்-A, C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
வெள்ளை பூசணியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகின்றன, மேலும் இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமத்தை இயற்கையாகவே பளபளக்க செய்கின்றன.
வெள்ளை பூசணியில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. வெள்ளை பூசணி ஜூஸ், இரத்தத்தை சுத்திகரிக்கப்பதோடு உடலில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்குகிறது. வெள்ளை பூசணியில் உள்ள வைட்டமின்-B2 ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இந்த ஜூஸை குடிப்பதால் உடல் பலவீனமும் நீங்கும்.
வெள்ளை பூசணியில் 96% தண்ணீர் உள்ளது. மேலும் இது நார்ச்சத்து நிறைந்தது. இதனை உட்கொள்வதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். நீர்ச்சத்து நிறைந்த வெள்ளை பூசணியை உட்கொள்வது செரிமானத்தை சீராக்குகிறது. அதே போல் உடல் எடையைக் குறைக்கவும் வெள்ளை பூசணி உதவுகிறது. வெள்ளை பூசணி ஜூஸ், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இதில் வைட்டமின்-C அதிகம் உள்ளது.
நீங்களும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வெள்ளை பூசணி ஜூஸை எடுத்து கொள்ளுங்கள். நல்ல பலன்களை பெறலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com