Summer Scalp Healthy: கோடையில் உச்சந்தலையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் சூப்பரான தீர்வு

இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலமும், சரியான அணுகுமுறை மூலமும், தற்போதைய வெப்ப அலைக்கு மத்தியில் உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையைப் பாதுகாக்க வழிகள்

 
scalp healthy card image ()

அபரிமிதமான வியர்வை மற்றும் நமது சருமத்தில் எரியும் சூரியக் கதிர்களால் உடலில் பல பாதகமான விளைவுகளை நாம் அனைவரும் உணர முடியும். இந்த கோடை வெய்யில் உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன என்பது நமக்கு தெரியும். இந்த சிக்கலைப் பற்றி அறிந்துக்கொண்டு அதற்கான தீர்வவை பெற டாக்டர் பாத்ராவின் குழும நிறுவனங்களின் ட்ரைக்காலஜிஸ்ட் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அக்ஷய் பத்ரா கூறியுள்ளார். கடுமையான வெப்ப வெளிப்பாட்டிலிருந்து தலைமுடியைப் பாதுகாக்க அவர் கூறும் முடி பராமரிப்பு வழக்கம் உதவியாக இருக்கும்.

கோடையில் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த டிப்ஸ்

oil massage inside

  • உச்சந்தலையில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரித்து உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும் அல்லது தலையில் முடிக்கு ஷாம்பு போடும் போது விரல் நுனியில் மசாஜ் செய்யவும்.
  • உச்சந்தலையை ஈரப்பதமாக்க மென்மையான ஷாம்பூவைப் பயன்படுத்தவும். தேங்காய் எண்ணெய், ஷியா வெண்ணெய் அல்லது ஆர்கான் எண்ணெய் போன்ற சேர்க்கப்பட்ட எண்ணெய்களை பயன்படுத்வும். ஏனெனில் அவை ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகின்றன.
  • ல்பேட்டுகள் மற்றும் பாரபென்கள் இல்லாத ஷாம்பூவைக் கொண்டு 5.5 pH சமநிலையுடன் உங்கள் தலைமுடியைக் கழுவுவது நல்லது. அதேபோல் கோடையில் அதிக வியர்வை ஏற்படுவதால் வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைமுடியைக் கழுவ வேண்டும்.
  • முடி பராமரிப்பு வழக்கத்தில் சீரம், கிரீம்கள் அல்லது எண்ணெய்கள் போன்ற ஆண்டி-ஃபிரிஸ் தயாரிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். சிலிகான் அல்லது கிளிசரின் போன்ற பொருட்களால் செறிவூட்டப்பட்ட தயாரிப்புகளை பயன்படுத்துங்கள். இது முடி வெடிப்பை மென்மையாக்கவும், உதிர்வதை குறைக்க உதவும்
  • சூரியக் கதிர்கள் நேரடியாக உச்சந்தலை மீது படாமல் இருக்க தலைமுடியை தொப்பி அல்லது துப்பட்டாவால் மூடி இருங்கள். இது முடி இழைகளை வறட்சி மற்றும் நிறம் மங்காமல் பாதுகாக்கும்.

முழுமையான பராமரிப்பு

shamboo inside  ()

இயற்கையான பொருட்களை கொண்டு முடி மற்றும் உச்சந்தலை பிரச்சனைகளை சரி செய்யலாம். வைட்டமின் பி7, திராட்சை விதை சாறு மற்றும் பிற அத்தியாவசிய வைட்டமின்களான ஏ, பி6, பி12, டி2 மற்றும் ஈ போன்ற பயோட்டின் நன்மைகள் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இதனால் ஒட்டுமொத்த உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்கும்.

மேலும் படிக்க: முடி வளர்ச்சியை தூண்ட உதவும் வெங்காயம், தயிர் ஹேர் மாஸ்க்

இந்த கதை உங்களுக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக பகிரவும். இதுபோன்ற பிற கதைகளைப் படிக்க ஹர்சிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP