herzindagi
image

வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த வால்நட் எண்ணெய், முடி சார்ந்த பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது

பல்வேறு முடி பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம். அவற்றை விலை அதிகம் கொடுத்து சந்தையில் வாங்குவதற்கு பதிலாக எளிய முறையில் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம்.
Editorial
Updated:- 2025-06-23, 22:33 IST

வால்நட்ஸில் வைட்டமின் ஏ, டி, ஒமேகா-3 கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளன. அக்ரோட் அல்லது வால்நட் என்று அழைக்கப்படும் இந்த பருப்பு முளைக்கு சிறந்த உணவாக சொல்லப்படுகிறது. இந்த உலர் பருப்பு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தலைமுடிக்கும் கூட சிறந்தது.  தலைமுடிக்கு வால்நட்ஸின் நன்மைகளை அனுபவிக்க இதை வீட்டில் தயாரித்து எண்ணெயாகப் பயன்படுத்தலாம். இந்த வால்நட் எண்ணெய் இப்போதெல்லாம் சந்தையில் எளிதாகக் கிடைக்கிறது, ஆனால் அற்புதமான பலன்களைப் பெற வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எண்ணெயையே பயன்படுத்துவது நல்லது. வீட்டிலேயே வால்நட் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்பதை பார்க்கலாம். 

வால்நட் எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்

 

1 கப் வால்நட்ஸ்
1 1/2 கப் தேங்காய் எண்ணெய்

 

மேலும் படிக்க: சருமம் மற்றும் முடி சார்ந்த 5 முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆமணக்கு எண்ணெய்

 

முடிக்கு சிறந்த பலனுக்கு வால்நட் எண்ணெய் தயாரிக்கும் முறை

 

  • ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து அதில் அனைத்து வால்நட்ஸையும் சேர்த்து கொதிக்க வைக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு, வால்நட்ஸை வடிகட்டி குளிர்விக்க விடவும்.
  • இந்த வால்நட்ஸை எல்லாம் அரைத்து ஒரு பொடியாக மாற்றவும்.
  • இந்த வால்நட் பொடியை தேங்காய் எண்ணெய் கொள்கலனில் சேர்க்கவும்.
  • எண்ணெய் அதன் நிறத்தை மாற்றுவதை பார்த்து. நீங்கள் இந்த எண்ணெயைப் பயன்படுத்தத் தொடங்கலாம்.
  • இந்த எண்ணெயை ஒரு வாரத்தில் 2-3 முறை பயன்படுத்தலாம்.
  • தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக நீங்கள் முடிக்கு பயன்படுத்தும் மற்ற எண்ணெய்கள் இருந்தால் அவற்றில் சேர்க்கலாம்.

walnut

வால்நட் எண்ணெயைப் பயன்படுத்துவதன் நன்மைகள்

 

  • இந்த எண்ணெயில் வைட்டமின்கள் மற்றும் பயோட்டின் உள்ளதால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதில் இருக்கும் பொட்டாசியம் முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. வால்நட் எண்ணெய் முடியின் வேர்களை வலுப்படுத்தி முடியை வளர வைக்கிறது.
  • வெள்ளை முடி உள்ள பெண்கள் இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம், ஏனெனில் இது நிறம் நீண்ட நேரம் இருக்க வைக்கிறது. இது தலைமுடியை மேலும் பளபளப்பாகக் காட்டுகிறது.
  • பொடுகு என்பது நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான முடி பிரச்சனை. அதை சமாளிப்பது கடினமாக இருக்கலாம். இதற்கு சரியான சிகிச்சையளிக்கவில்லை என்றால், அது மேலும் அதிகரிக்கலாம். தலைமுடியில் வால்நட் எண்ணெயைத் தடவுவது பொடுகை முற்றிலுமாக அகற்ற உதவும். வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்தலாம்.

thick hair (3)

  • முடி உதிர்தல் என்பது நாம் அனைவரும் எதிர்கொள்ளும் மற்றொரு பொதுவான பிரச்சினை. வால்நட் எண்ணெயில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் உச்சந்தலையில் ஏற்படும் சேதத்தை தடுக்கிறது. நீங்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை வால்நட் எண்ணெயைப் பயன்படுத்தலாம்.
  • முடி மெலிதாக இருந்தால், வால்நட் எண்ணெய் தலைமுடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்ற உதவும். இந்த எண்ணெய் தலைமுடியை ஊட்டமளித்து, முடி உடைவதைத் தடுக்கிறது.

 

மேலும் படிக்க: கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர இந்த வைட்டமின்களை உணவில் கண்டிப்பாக சேர்க்கவும்

 

இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சிகிச்சையளிப்பதோடு, இந்த எண்ணெய் உங்கள் உச்சந்தலையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com