Korean coffee mask: முகம் ஜொலிக்க இந்த கொரியன் காபி மாஸ்க் ட்ரை பண்ணுங்க!

வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து எளிய முறையில் கொரியன் காபி மாஸ்க் செய்வது எப்படி என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

 
korean coffee mask
korean coffee mask

காபி என்றால் யாருக்கு தான் பிடிக்காது? காபியில் உள்ள சுவையும் அதன் நறுமணமும் காபி பிரியர்களை அடிமை படுத்துகிறது. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கப் காபி இல்லாமல் அந்த நாளை துவங்குவது பலருக்கும் கடினம். காபி குடிப்பதால் அவர்கள் உடல் புத்துணர்ச்சியாக இருப்பதாக நினைக்கிறார்கள். நம் உடலுக்கு மட்டுமின்றி நம் சருமத்திற்கும் காபி புத்துணர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பலரும் முகத்தில் காபி மாஸ்க் பயன்படுத்துவர். காபியில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுகிறது. இதனால் முகம் பளபளப்பாகவும் மென்மையாகவும் மாறுகிறது.

இன்றைய காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளின் உணவுமுறை, ஆடைகள், பழக்க வழக்கம் போன்றவைகள் நம் தமிழகத்தில் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக கொரியன் உணவு, கொரியன் டிவி சீரிஸ் மற்றும் கொரியன் மியூசிக் கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் கொரியன் அழகு குறிப்புகளும் ஒரு பக்கம் பிரபலமாகி வருகிறது.

கொரியன் பெண்களின் சருமம் கண்ணாடி போல ஜொலிப்பதை நாம் பார்த்திருப்போம். அதற்க்கு பின்னால் உள்ள சீக்ரெட் அழகு குறிப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா? கொரியன் அழகு பராமரிப்பு முறையில் இந்த கொரியன் காபி மாஸ்க் அதிக நன்மை தருகிறது. நம் வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்து எளிய முறையில் இந்த கொரியன் காபி மாஸ்க் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • காபி தூள்
  • நாட்டு சர்க்கரை
  • தேன்
  • தேங்காய் எண்ணெய்
  • லாவெண்டர் எண்ணெய் அல்லது டீ ட்ரீ எண்ணெய்

coffee mask

செய்முறை:

  • இரண்டு டேபிள் ஸ்பூன் காபித்தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் எடுத்துக் கொள்ளவும்.
  • இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கலக்கவும். இந்த பொருட்கள் ஒன்றோடு ஒன்று நன்றாக சேரும் வரை கலக்கவும்.
  • இது முகத்தில் தடவும் பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
  • ஒருவேளை தண்ணீர் பதத்தில் இருந்தால் காபி தூளையும் நாட்டுச் சர்க்கரையும் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • இப்போது நறுமணத்திற்காக லாவெண்டர் எண்ணெய் அல்லது டீ ட்ரீ எண்ணெய் சில துளிகள் மட்டும் இந்த பேஸ்டுடன் சேர்க்கலாம். அவ்வளவுதான் கொரியன் காபி மாஸ்க் ரெடி!

பயன்படுத்துவது எப்படி?

முதலில் முகத்தை நன்றாக சோப் அல்லது பேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும். பிறகு ஒரு துண்டால் முகத்தில் உள்ள ஈரத்தை துடைத்து எடுக்கவும். இப்போது தயார் செய்து வைத்த கொரியன் காபி மாஸ்கை கண் பகுதியில் மட்டும் தவிர்த்து முகம் முழுவதும் பூசுங்கள். இதன் பிறகு உங்கள் கைவிரல்களை பயன்படுத்தி முகத்தில் சில நொடிகளுக்கு மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

மேலும் படிக்க: கருந்திட்டுகள் மறைந்து முகம் பளபளப்பாக ஒரு உருளைக்கிழங்கு மட்டும் போதுமாம்!

இந்த காபி மாஸ்க்கில் உள்ள நாட்டு சர்க்கரை மற்றும் காபித்தூள் உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். முகத்தில் பூசிய இந்த கொரியன் காபி மாஸ்கை 10 - 15 நிமிடங்கள் வரை காய விடுங்கள். 15 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இந்த கொரியன் காபி மாஸ்கை இரவு தூங்குவதற்கு முன்பு பயன்படுத்தலாம். இதனை வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் முகம் மென்மையாகி கண்ணாடி போல ஜொலிக்கும் என்று கூறப்படுகிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP