herzindagi
turmeric beauty tips tricks

முகம் பளபளப்பாக மஞ்சள் பேஸ் மாஸ்க் பயன்படுத்தும் முறை!

<span style="text-align: justify;">&nbsp;மஞ்சள் பேஸ் பேக்கை நீங்கள் பயன்படுத்தும் போது, முகத்திற்கு அழகு சேர்ப்பதோடு சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக்கு சரிசெய்ய உதவியாக இருக்கும்.</span>
Updated:- 2024-03-08, 17:20 IST

மஞ்சள் முகம் தான் பெண்களுக்கு அழகு என்பார்கள். ஆனால் இன்றைய பெண்களிடம் மஞ்சள் பூசும் பழக்கமே முற்றிலும் இல்லாமல் ஆகிவிட்டது. நமக்கு பல்வேறு சரும பிரச்சனைகள் வருவது இதுவும் காரணமாக அமைகிறது. இதற்கு சிகிச்சையளிப்பதற்காக அழகு நிலையங்களுக்குச் சென்றாலும் மஞ்சளில் தயாரிக்கப்படும் அழகு சாதனப் பொருள்கள் தான் பெரும்பாலும் இடம் பெறுகிறது.

எனவே சரும பிரச்சனைகள் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் மஞ்சள் பேஸ் மாஸ்க் பயன்படுத்துவது நல்லது. மஞ்சளை பால், தேன், எலுமிச்சை போன்றவற்றுடன் சேர்த்துப் பயன்படுத்துங்கள். இவ்வாறு பயன்படுத்தும் போது என்னென்ன நன்மைகளை நாம் பெற முடியும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

 face glowing ()

மேலும் படிக்க: ஒரே வாரத்தில் கருவளையத்தைப் போக்க உதவும் உருளைக்கிழங்கு ஐஸ் க்யூப்!

சரும பராமரிப்பிற்கு உதவும் மஞ்சள்:  

  • மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கிருமிநாசினி பண்புகள் உள்ளதால், சருமத்தில் பாக்டீரியா தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் கரும்புள்ளிகள், முகப்பரு தழும்புகளைப் போக்குவதற்கும் உதவியாக உள்ளது.
  • மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்களை நீக்கப் பயன்படுவதோடு முகப்பரு பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுவதைத் தடுக்கிறது.
  • மஞ்சளில் உள்ள குர்குமின், தோல் நிறம் மாறுவதைத் தடுப்பதோடு முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
  • மஞ்சளில் அதிகளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், ஹைப்பர் பிக்மென்டேஷன், முகப்பரு வடுக்கள் மற்றும் பிற சரும பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது. 

face brightening

  • மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கால்சியம் உள்ளதால், சருமத்தில் உள்ள அசுத்தங்கள் அல்லது அதிகப்படியான எண்ணெய்களை அகற்ற உதவுகிறது. இதன் மூலம்  மென்மையான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற முடியும்.
  •  மஞ்சளில் உள்ள வைட்டமின் பி6 உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி, வறண்ட சருமத்தை குணப்படுத்தி புதிய செல்களை உருவாக்குகிறது.
  • மஞ்சளில் உள்ள பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் விரைவில் வயதான அறிகுறிகளைத் தடுக்க உதவுகிறது.   

மஞ்சள் பேஸ் மாஸ்க் தயாரிக்கும் முறை:

turmeric face mask benefits

மேலும் படிக்க: முகப்பருவை வராமல் தடுக்கணுமா? கிரீன் டீ & தேன் ஃபேஸ் ஸ்க்ரப் ட்ரை பண்ணுங்க!

  • ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் பால் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் முழுவதும் நன்றாக தடவிக் கொள்ள வேண்டும். 30 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். இது போன்று தினமும் முகத்தில் அப்ளை செய்துக் கொள்வது நல்லது. ஒருவேளை உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை என்றால், வாரத்திற்கு இருமுறையாவது மஞ்சள் பேஸ் பேக்கை நீங்கள் பயன்படுத்த வேண்டும். முகத்திற்கு அழகு சேர்ப்பதோடு சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைக்கு சரிசெய்ய உதவியாக இருக்கும்.

 Image Source - Google

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com