வெளுத்து வாங்கும் வெயில்; தலைமுடியைப் பராமரிக்க கட்டாயம் நீங்கள் செய்ய வேண்டியது?

வெயில் காலத்தில் தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு,வாரத்திற்கு ஒரு முறையாவது ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து ஷாம்பு போன்று உபயோகிக்கவும்.

summer hair care tips

கோடைக்காலம் வந்தாலே சருமத்தில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். முகம் வறண்டு விடுதல், கருந்திட்டுகள் ஏற்படுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டால், இந்த வெயில் காலத்தில் தலைமுடியிலும் பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். சுட்டெரிக்கும் வெயிலால் வியர்வை அதிகளவில் வெளியேறும் போது தலைமுடியில் வியர்வை அதிகளவில் படியக்கூடும். இது முடியை வறண்டு விட செய்வதோடு முடி வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கிறது. இந்த வெயிலில் தலைமுடியை மீண்டும் புத்துணர்ச்சியோடும், எவ்வித பாதிப்பும் இல்லாமல் பராமரிப்பதற்கான டிப்ஸ்கள் இங்கே.

care tips

தலைமுடி ஆரோக்கியத்திற்கான டிப்ஸ்கள்:

  • வெயில் காலத்திலும் தலைமுடியைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால், ஹேர் மாஸ்க்குகளை வாரத்திற்கு இரண்டு முறையாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இதற்காக அழகுநிலையங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டில் உள்ள தயிர், ஆலிவ் எண்ணெய், கற்றாழை ஜெல், தேன் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். இது முடியின் வறட்சியைப் போக்குவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
  • தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்யைப் பயன்படுத்தி தலை முடியின் வேரிலிருந்து நுனி வரை முடிக்கு மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் இதை அப்படியே விட்டு வைத்த பின்னர், ஷாம்பு அல்லது சீயக்காய் கொண்டு அலச வேண்டும்.
  • வெயில் காலத்தில் தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு,வாரத்திற்கு ஒரு முறையாவது ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து ஷாம்பு போன்று உபயோகிக்கவும். தலைக்கு குளிர்ச்சியையும்,முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது.
  • நெல்லிக்காய், வெங்காயம் போன்றவற்றை அரைத்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தலைமுடிக்கு உபயோகிக்கலாம். இந்த எண்ணெய்யை இரவு தலை முடிக்கு மசாஜ் செய்யவும் உபயோகிக்கலாம். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள்,வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவை தலைமுடியை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
  • வறண்ட சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பிரிங்ராஜ் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இது முடி ஆரோக்கியத்திற்கான சிறந்த மூலிகைகளில் ஒன்றாக உள்ளது.
summer hair care for ladies
  • பொதுவாகவே நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் காரணமாக உச்சந்தலையில் பொடுகு பிரச்சனை ஏற்படும். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால், திரிபாலா போன்ற மூலிகைகளை உட்கொள்ளலாம்.
  • தலைமுடிக்கு ஷாம்புகள் பயன்படுத்துவதை விட பூந்திக் கொட்டை, வெந்தயம், கறிவேப்பிலை, நெல்லிக்காய் போன்றவற்றையெல்லாம் சேர்த்து சீயக்காய் போன்று அரைத்துக் கொண்டு, வாரத்திற்கு ஒருமுறையாவது இதை உபயோகிக்க வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தலைமுடியைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.
  • ஒருவேளை உங்களது தலைமுடியை அலசுவதற்கு நீங்கள் ஷாம்பூவைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், எந்த ஷாம்பு பயன்படுத்துகிறீர்களோ? அது மிதமான மற்றும் ஈரப்பதமூட்டும் ஷாம்பூவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP