இந்த ஆயுர்வேத நீரில் கூந்தலை கழுவினால், 7 நாளில் பொடுகு காணாமல் போய்விடும்

பொடுகு பிரச்சனை முடியை வலுவிழக்கச் செய்வது மட்டுமல்லாமல், முடி உதிர்தலுக்கும் வழிவகுக்கிறது. பொடுகு காரணமாக ஏற்படும் ஸ்கால்ப் இன்ஃபெக்ஷனில் இருந்து உடனடியாக விடுபட சில வீட்டு வைத்தியம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
image

பொடுகு பிரச்சனை பெரும்பாலான இளம் பெண்களிடம், ஏன் இளைஞர்களிடம் கூட அதிகமாக காணப்படுகிறது. பொடுகு பிரச்சனையால் தலையில் அரிப்பு ஏற்படுகிறது. இது முடியை சேதப்படுத்தும். முடி உதிரத் தொடங்குகிறது, உச்சந்தலையில் தொற்று ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை போக்க சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. இந்த மூலிகை நீரைக் கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவினால் பொடுகுத் தொல்லையிலிருந்து ஒரே வாரத்தில் படிப்படியாக விடுபடலாம்.

பொடுகுக்கு இயற்கையான ஆயுர்வேத தண்ணீர் சிகிச்சை

RxsQv0LdO6TcOZcGadHe-1726593740941

வெந்தய நீர்

வெந்தய நீரில் தலையை அலசினால் பொடுகு குணமடைவது மட்டுமின்றி கூந்தல் வலுவாகவும் நீளமாகவும் இருக்கும். வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து பேஸ்ட் செய்து கூந்தலில் தடவினால் கூந்தல் வலுவடைவதோடு பொடுகு பிரச்சனையும் நீங்கும்.

வேப்பம்பூ நீர்

process-aws (27)

நோய்த்தொற்று, ஒவ்வாமை ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற வேம்பு பொருத்தமான ஆயுர்வேத மருந்து. பொடுகைப் போக்க வேப்பம்பூ நீர் பயனுள்ளதாக இருக்கும். வேப்பம்பூ தண்ணீரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன.

இது முடியின் வேர்களில் படிந்துள்ள அழுக்குகளை நீக்குவது மட்டுமின்றி கூந்தலின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கிறது. தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு பயன்படுத்தினால், ஷாம்பு பயன்படுத்திய பின் வேப்பம்பூ நீரில் தலையை அலசுவது நல்லது.

எலுமிச்சை சாறு

lemon-juice-daily-in-summer

எலுமிச்சை இயற்கையாகவே பொடுகை குணப்படுத்தும். எலுமிச்சை சாறு பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை உடைப்பதால் பொடுகுக்கு உதவியாக இருக்கும். இது உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் உற்பத்தியை குறைக்க உதவுகிறது.

மஞ்சள் நீர்

turmeric_water_everyday_benefit

மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. உங்கள் தலையை மஞ்சள் நீரில் கழுவுவது உங்கள் தலைமுடிக்கு நன்மை பயக்கும். பொடுகை போக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பச்சை மஞ்சளை அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீர் ஆறிய பின் அந்த நீரில் தலையை அலசவும்.

கருவேப்பிலை தண்ணீர்

curry-leaves-1729927544915 (1)

கறிவேப்பிலை பொடி முடி வளர்ச்சிக்கு நல்லது மற்றும் முடி நரைப்பதைத் தடுக்கிறது. கறிவேப்பிலையை எண்ணெயில் கலந்து தலைமுடியில் தடவுவது முடியின் ஆரோக்கியத்திற்கு நல்லது. கறிவேப்பிலை தண்ணீரும் பொடுகை குணப்படுத்துகிறது. கறிவேப்பிலையின் சாறு பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பொடுகை போக்குகிறது.

மேலும் படிக்க:நெல்லிக்காய், கிராம்புகளை சூடாக்கி தயாரிக்கும் எண்ணெய் - தலை முடியை 10 நாளில் வளரச் செய்யும்

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil


image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP