ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. பொதுவாக இந்த பழத்தை சாப்பிட்டு தோலை தூக்கி வீசிவிடுவோம். ஆனால் இந்த தோலை வைத்து நம் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கும். சருமத்தில் பளபளப்பை அதிகரிக்க ஆரஞ்சு தோல் ஒரு சிறந்த இயற்கை மூலப்பொருளாகும். இது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்தது. ஆரஞ்சு தோலை பயன்படுத்துவதால் முகப்பரு, தழும்பு, மற்றும் வயதான சுருக்கங்கள் குறையும். நம் சருமத்திற்கு ஆரஞ்சு தோலின் பயன்கள் மற்றும் தோல் பளபளப்புக்காக இதை பயன்படுத்தும் முறை பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆரஞ்சு தோலில் உள்ள சிட்ரிக் அமிலம், தோலின் எண்ணெய்ச்சுரப்பை சமநிலைப்படுத்தி முகப்பருக்களை குறைக்க உதவுகிறது. இது இயற்கையாக தோலை சுத்தப்படுத்தி, இறந்த செல்களை நீக்குகிறது.
ஆரஞ்சு தோலில் உள்ள வைட்டமின் C, நம் சருமத்தின் மங்கலான நிறத்தை மேம்படுத்தி பிரகாசத்தை அதிகரிக்கிறது. இது மெலனின் உற்பத்தியை குறைத்து, ஒரே மாதிரியான தோல் நிறத்தை தருகிறது.
ஆரஞ்சு தோலின் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள், தோலின் மீள் தன்மையை மேம்படுத்தி வயதான அறிகுறிகள், முக சுருக்கங்களை குறைக்கின்றன.
ஆரஞ்சு தோலில் உள்ள ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டிஇன்ஃப்ளேமட்டரி பண்புகள், சரும தொற்றுகள் மற்றும் எரிச்சலை குறைக்க உதவுகின்றன. மேலும் ஆரஞ்சு தோல் பவுடர், இயற்கையான ஒரு எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்பட்டு, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை குறைக்கிறது.
இரண்டையும் கலந்து, முகத்தில் பூசி 15 நிமிடங்கள் விட்டுவிட்டு தண்ணீரால் கழுவவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், சருமத்தை மிருதுவாக்கும், மேலும் ஆரஞ்சு தோல் பவுடர் இறந்த செல்களை நீக்கும்.
இரண்டையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடம் விட்டுவிட்டு கழுவவும். தேன் ஈரப்பதத்தை பராமரிக்கும், மேலும் ஆரஞ்சு தோல் பளபளப்பை தரும்.
அனைத்தையும் கலந்து, ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். தினமும் பஞ்சு கொண்டு அதில் இதை ஊற்றி முகத்தை துடைக்கவும். இது தோல் பிரச்சனைகளை குறைக்கும்.
இவற்றை கலந்து பேஸ்ட் தயாரித்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழுவவும். இது உங்கள் சருமத்தை வெளுப்பாக்கி பிரகாசத்தை தரும்.
ஆரஞ்சு பழத்தின் தோல் ஒரு இயற்கையான மற்றும் விலை மலிவான தோல் பராமரிப்பு பொருளாகும். இதை வீட்டிலேயே பல்வேறு வழிகளில் பயன்படுத்தி பளபளப்பான சருமத்தை நீங்கள் பெறலாம். தோல் உணர்திறன் இருப்பவர்கள் முதலில் பேட்ச் டெஸ்ட் செய்த பிறகு இதை முகத்தில் பயன்படுத்தவும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com