கொத்து கொத்தாக கொட்டும் தலைமுடி; கட்டுப்படுத்த பூண்டு பொடியைப் பயன்படுத்தும் முறை

பூண்டு பொடியில் உள்ள வைட்டமின்கள் பி6, சி, தாதுக்கள் மற்றும் மாங்கனீசு போனற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் இருந்து நுனி முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி முடி உதிர்வைத் தடுக்கிறது.
image

நம்முடைய சமையலில் இடம் பெறக்கூடிய பெரும்பாலான உணவுப்பொருட்களில் பல மருத்துவக் குணங்கள் நிறையவே உள்ளன. இந்த வரிசையில் செரிமானம் முதல் சளித்தொல்லை, எடை மேலாண்மை பலவற்றிற்குப் பேருதவியாக இருந்து வருகிறது பூண்டு. சமையலுக்கு வாசனைக்காக மட்டுமல்ல மேற்கூறியது போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதால் அடிக்கடி சமையலுக்குப் பயன்படுத்தி வருகிறோம். இதோடு மட்டுமின்றி பெண்களின் தலைமுடி பாதுகாக்கவும், முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் பூண்டு பொடி பேருதவியாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம் பூண்டு பொடியில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் பாதுகாக்கிறது. எப்படி? முழு விபரம் இங்கே.

முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் பூண்டு பொடி:

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தங்களுக்கு ஏற்படக்கூடிய முடி உதிர்வு பிரச்சனையை சமாளிப்பது என்பது பெரும் சவாலாக இருக்கும். ஒவ்வொரு முறையும் சீப்பை வைத்து தலைசீவும் போது கொத்து கொத்தாக முடி கொட்டும் போது மனதிற்கு ரணமாக அமையும். இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்றால், பூண்டு பொடியைப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க:அடுத்தடுத்து முகப்பரு - கருமையான முகத்தை 2 நிமிடங்களில் சரி செய்யும் 6 DIY டி-டான் ஃபேஸ் பேக்குகள்

பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை அதிகளவு பூண்டு கொண்டிருக்கிறது. இவற்றை தலைமுடிக்குப் பயன்படுத்தும் போது, தலையில் வரக்கூடிய கிருமிகளை விரைவாக அகற்ற உதவுகிறது. தலைமுடியில் கிருமிகள் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் காரணமாகவும் முடி வளர்ச்சி தடைபடுவதோடு முடி கொட்டும் பிரச்சனையும் ஏற்படக்கூடும். இது மட்டுமின்றி இதில் உள்ள சல்பர் சத்துக்கள், உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி வேர் முதல் நுனி வரை முடியின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

garlic powder


எப்படி பயன்படுத்துவது?

தலைமுடியின் வளர்ச்சிக்கும், முடி கொட்டுதலை நிறுத்துவதற்கும் பூண்டு பொடியைப் பலவகையில் பயன்படுத்தலாம். அவற்றில் சில இங்கே.

மேலும் படிக்க:கடலை மாவு, தயிர் இரண்டையும் 11 வழிகளில் இப்படி யூஸ் பண்ணுங்க- முகப்பொலிவிற்கு 100% கேரண்டி

பூண்டு பொடி மற்றும் தேங்காய் எண்ணெய்:

  • ஒரு சிறிய கிண்ணத்தில் பூண்டு பொடியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து லேசாக சூடாக்க வேண்டும். கொஞ்சம் சூடு ஆறியதும் சிறிதளவு தேன் கலந்துக் கொள்ள வேண்டும்.
  • தற்போது பூண்டு பொடி ஹேர் மாஸ்க் ரெடி. இதை உச்சந்தலையில் இருந்து தலைமுடியின் நுனி வரை தடவி சுமார் அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடவும்.
  • பின்னர் ஷாம்பு அல்லது சீயக்காயைப் பயன்படுத்தி தலைமுடியை அலசிக்கொள்ளவம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் வளர்சிக்கு உதவுகிறது.


பூண்டு பொடி மற்றும் கற்றாழை ஜெல்:

  • தலைமுடியின் வளர்ச்சி மற்றும் முடி உதிர்வைக் கட்டுப்படுத்த பூண்டு பொடியுடன் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்தலாம்.
  • ஒரு சிறிய பாத்திரத்தில் பூண்டு பொடி மற்றும் கற்றாழை ஜெல்லை நன்கு கலந்துக் கொள்ளவும். நல்ல பேஸ்ட் பதத்திற்கு வந்தவுடன் இந்த கலவையை உச்சந்தலையில் தடவி சுமார் 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும்.
  • பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசினால் போதும். பூண்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடியைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

Image source- Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP