Benefits of saffron : முகம் தக தகனு மின்ன குங்குமப்பூ ஃபேஸ்பேக்.. ட்ரை பண்ணி பாருங்க

முகத்திற்கு குங்குமப்பூவை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.  முகத்தை வெள்ளையாக்க குங்குமப்பூ ஃபேஸ்  பேக் கை கொடுக்கிறது. 

saffron benefits tamil

முகத்திற்கு குங்குமப்பூவைப் பயன்படுத்துவது பல நன்மைகளை தருகிறது. குங்குமப்பூ முகத்திற்கு இயற்கையான பிரகாசத்தை வழங்குகிறது. கூடுதலாக, இது கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற பிரச்சனைகளை க நீக்குகிறது. அதே போல் சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது. குங்குமப்பூவில் வைட்டமின் சி போன்ற இயற்கை ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை வைத்து செய்யப்படும் குங்குமப்பூ முகக் கிரீம் சூரியனால் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

குறிப்பாக முகம் வெள்ளையாக வேண்டும், ஜொலிக்க வேண்டும் என நினைக்கும் பெண்கள் தாரளமாக குங்குமப்பூவை தேர்ந்தெடுக்கலாம். இதனால் செய்யபப்டும் ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் போன்றவற்றை பயன்படுத்தினால் நல்ல ரிசலட் கிடைக்கும். குங்குமப்பூவைப் பயன்படுத்துவது சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது மற்றும் சருமத்திற்கு இயற்கையான பொலிவைக் கொண்டுவருகிறது.குங்குமப்பூவில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது மற்றும் முக தோற்றத்தை மேம்படுத்துகிறது. இது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, தோல் சுருக்கம் கோடுகள் வராமல் தடுக்கிறது.

bes facepack

30 வயதுக்கு மேல் முகத்தில் தோன்றும் நேர்த்தியான கோடுகள் மற்றும் சுருக்கங்களை எதிர்த்துப் போராடுகிறது. மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற வயதான பல அறிகுறிகளைப் போக்க உதவுகிறது. எனவே, முகத்திற்கு குங்குமப்பூவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

குங்குமப்பூ பாலாடை ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்

  • குங்குமப்பூ - சிறிதளவு
  • பாலாடை - சிறிதளவு

பயன்படுத்தும் முறை

  • முதலில் பால் பொங்கி வரும் போது மேலே வரும் பாலாடையை தனியாக எடுத்து கொள்ளவும்.
  • பின்பு அதில் சிறிதளவு குங்குமப்பூ சேர்த்து மிக்ஸ் செய்து, மதிய நேரத்தில் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் ஊற விடவும்.
  • பின்பு முகத்தை குளிர்ந்த நீரால் வாஷ் செய்யவும்.
  • முகம் பிரகாசமாகி ஜொலிக்க தொடங்கும். தினமும் இதை செய்யலாம்.

தயிர் குங்குமப்பூ ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்

  • குங்குமப்பூ - சிறிதளவு
  • தயிர் - 1 டீஸ்பூன்
  • தேன் 2 சொட்டு
  • எலுமிச்சை சாறு - சிறிதளவு

பயன்படுத்தும் முறை

  • கிண்ணத்தில் குங்குமப்பூவுடன் தயிர், எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
  • பின்பு இந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் ஊற விடவும்.
  • பின்பு நார்மல் வாட்டரில் முகத்தை சுத்தம் செய்யவும்.
  • வாரத்திற்கு 3 முறை இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்தவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP