
வெயில் காலத்தில் வியர்வை மற்றும் சூரிய ஒளியால் தலையில் அரிப்பு பிரச்னை ஏற்பட்டு, முடியையும் பாதிக்கிறது. கோடை வெயில் காலத்தில் தலை முடி சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்ள நாம் வேண்டும். உச்சந்தலை ஆரோக்கியமாக இருந்தால் கூந்தலும் அழகாக இருக்கும். இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் அதே வேளையில், கோடை காலத்தில் முடி உதிர்தல் மற்றும் உடைதல் போன்ற பிரச்சனைகளை குறைக்கும் சில குறிப்புகள் இப்பதிவில் விரிவாக உள்ளது.
மேலும் படிக்க: ஜொலிக்கும் சருமத்தை பெற திராட்சை விதை சாற்றை எப்படி பயன்படுத்துவது?
வெயில் காலத்தில் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, எண்ணெயைக் கொண்டு தலையை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். உச்சந்தலையில் மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து உச்சந்தலையை ஆரோக்கியமாக வைக்கிறது. உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருப்பது முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடி உதிர்தல் மற்றும் உடைதல் பிரச்சனையையும் குறைக்கும்.முடிந்த அளவு தூய்மையான தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி வாரம் இரண்டு அல்லது மூன்று முறை உச்சந்தலையில் மசாஜ் செய்யவும்.

கோடை காலத்தில் தலைமுடியை அதிகமாக கழுவுவதை தவிர்க்க வேண்டும். முடியை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை மட்டுமே கழுவ வேண்டும். முடியை அதிகமாகக் கழுவுவது முடியின் உச்சந்தலையை சேதப்படுத்தும்.இதனால் அதன் உறுதித்தன்மை குறையும். அதே நேரத்தில், தலைமுடியைக் கழுவுவதற்குப் பதிலாக, ஷாம்பூவின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். உங்கள் தலைமுடியைக் கழுவ நல்ல ஷாம்பூவைப் பயன்படுத்துங்கள். இதற்காக நீங்கள் தோல் மருத்துவர் அல்லது அழகு நிபுணரிடம் ஆலோசனை பெறலாம்.

கோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறி, முடி வறண்டு போகும். இப்பிரச்சனையை குறைக்க பெண்கள் தலைமுடியை அதிகம் அலசுவதுடன், கண்டிஷனரையும் பயன்படுத்துங்கள். ஆனால் கண்டிஷனர் கூந்தலுக்கு தான் என்பதை நினைவில் வைத்து தலையில் தடவாதீர்கள். உச்சந்தலையில் கண்டிஷனரைப் பயன்படுத்துவது முடியின் வேர்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இது முடியை சேதப்படுத்தி முடி உடையும்.
மேலும் படிக்க: ஜொலிக்கும் சருமத்தை பெற திராட்சை விதை சாற்றை எப்படி பயன்படுத்துவது?
image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com