இப்போதெல்லாம் கருப்பு முடி எப்போது வெள்ளையாக மாறும் என்பதை கணிக்கவே முடிவதில்லை. பெரும்பாலானோர் நரை முடியை மறைக்க உடனே ஹேர்டை பயன்படுத்த தொடங்குகின்றனர். இதனால் முடி கருமையாகிறது, ஆனால் இது மிகவும் மோசமானது. முடியின் இயற்கையான பொலிவு முதல் முடியின் அமைப்பு வரை அனைத்தையும் இது பாதிக்கிறது. இதுபோன்ற சமயங்களில் வீட்டு வைத்தியம் மூலம் இந்த பிரச்சனையை குறைக்கலாம். இதை சரிசெய்வதற்கான வழிகள் குறித்து இப்போது பார்ப்போம்.
பாதாம்
பாதாம் சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகமாகும் என நம்பப்படுகிறது. அதனால் தான் தினமும் 2-4 பாதாம் பருப்புகளை சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதேபோல, முகம் மற்றும் முடி தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யவும் பாதாம் பயன்படுத்தலாம். வீட்டு வைத்தியத்தில், குறிப்பாக வெள்ளை முடிக்கு பாதாமை பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.
ஏன் பாதாமை பயன்படுத்த வேண்டும்?
பாதாமில் உள்ள கற்றலேசு தலைமுடி நரைப்பதை தடுக்கிறது. இது தவிர, பாதாமில் இருக்கும் காப்பர், மெலனினை உற்பத்தி செய்கிறது, இதனால் வெள்ளை முடி வராது. பாதாம் தலை முடிக்கு மிகவும் நன்மை பயக்க இதுதான் காரணம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர்
- பாதாம் - 1 கைப்பிடி
செய்ய வேண்டியவை
- பாதாமை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- மறுநாள் காலையில் அதை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.
- அரைத்த பேஸ்ட்டை வடிக்கட்டி சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.
- வெள்ளைமுடிக்கான வீட்டு வைத்தியம் இப்போது தயார்.
பயன்படுத்தும் முறை
- முதலில் உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசவும்.
- அதன் பிறகு வடிக்கட்டிய பாதாம் சாறை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை அலசவும்.
- இதை வாரத்திற்கு இரண்டு முறை தலைமுடியில் தடவி மாற்றத்தை பார்க்கவும்.
பிளாக் காபி
பெரும்பாலான மக்கள் பிளாக் காபி குடிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கருப்பு காபியை வெள்ளை முடி பிரச்சனைக்கும் பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர் - 2-3 கப்
- காபி தூள் - 4-5 டீஸ்பூன்
செய்ய வேண்டியவை
- முதலில் 2-3 கப் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.
- பின்பு மற்றொரு கப்பில் தண்ணீர் ஊற்றி அதில் 4-5 டீஸ்பூன் காபி தூளை சேர்க்கவும்.
- இப்போது இந்த காபியை கொதிக்க வைத்த நீரில் சேர்க்கவும்.
- பின்னர் ஆற வைக்கவும்.
- இந்த கருப்பு காபியை உங்கள் தலைமுடியில் தடவவும்.
- சுமார் அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் தலைமுடியை அலசவும்.
- இதே போல் கருப்பு காபியை வாரத்திற்கு ஒரு முறை தலைமுடிக்கு தடவவும்
- உங்கள் தலைமுடி கருப்பாக மாறும்.
செய்ய கூடாதவை
- வெள்ளை முடியைத் தடுக்க, உங்கள் தலைமுடிக்கு எண்ணெய் தடவ வேண்டும். எண்ணெய் உங்கள் முடி வெள்ளையாக மாறுவதை தடுப்பது மட்டுமல்லாமல் அதை வலுவாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும். தலையில் கடுகு அல்லது தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
- தலைமுடி நரைப்பது, நீங்கள் இனி இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்பதை அறிவுருத்துகிறது. குறிப்பாக சல்பேட் கொண்ட ஷாம்புகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவை முடிக்கு மிகவும் தீங்கு விளைவிக்ககூடியவை.
- நாம் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் நமது முடி, சருமம் மற்றும் உடலிலும் நேரடி விளைவை ஏற்படுத்துகின்றன. ஆகையால் உங்கள் உணவில் மெலனின் உற்பத்தியாகும் ஊட்டச்சத்துக்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- முடி பராமரிப்பு வழக்கத்தை முறையாக பின்பற்ற வேண்டும். இது முடி சேதமடைவதை தடுக்கிறது.
இது போன்ற பதிவுகளை படிக்க விரும்பினால் கமெண்டில் தெரியப்படுத்துங்கள். இந்த பதிவை பகிர மறக்காதீர்கள். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation