மணப்பெண்கள் திருமண நாளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது சரும பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பளபளப்பான முகத்திற்கான திறவுகோல் ஒருவர் பின்பற்றும் சரும பராமரிப்பு வழக்கமாகும். அழகு முறையை செயல்படுத்த தொடங்கும் மூன் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது உங்கள் சருமத்தின் வகைகள். ஈரப்பத மூட்டும் ஃபேஸ் வாஷ் வறண்ட சருமத்திற்கு நன்மையைச் செய்யக்கூடும், ஆனால் எண்ணெய்ப் பசையுள்ள முகத்திற்கு இது பொருந்தாது.
எண்ணெய் சருமம் பருக்கள், புள்ளிகள், முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் போன்ற பிரச்சனைகள் மற்ற சருமங்களை விட அதிகமாக இருக்கும். அதனால் மணமகள் சில மாதங்களுக்கு முன்பே அழகுப் பயிற்சியைத் தொடங்க வேண்டும். உங்களுக்கு ஏற்கனவே முகப்பரு இருந்தால் நீங்கள் ஒரு தோல் மருத்துவரை அணுகி, திருமணத்திற்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பே பரிந்துரைக்கப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். மணப்பெண்கள் தேர்வு செய்யக்கூடிய பல்வேறு வகையான முக சிகிச்சைகள் உள்ளன. இது முகப்பரு, தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைக்க உதவும்.
மேலும் படிக்க: எண்ணெய் தடவாமல் கூந்தலை ஈரப்பதத்துடன் ஆரோக்கியமாக வைத்திருக்க வழிகள்
எண்ணெய் சருமத்தின் கரடுமுரடான அமைப்புடன் பெரிய துளைகளைக் கொண்டுள்ளது. எனவே சுற்றுச்சூழலிலிருந்து தோல் ஈர்க்கும் மாசுகள் மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்ய சுத்தப்படுத்துதல் முக்கியமானது. இதற்க்சரியான ஃபேஸ் வாஷ் அதிகப்படியான எண்ணெயை அகற்றுவது மட்டுமல்லாமல், பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளிலிருந்தும் விடுபட உதவுகிறது. இருப்பினும், சோப்பு மற்றும் தண்ணீரை அடிக்கடி பயன்படுத்துவதில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது சாதாரண pH மற்றும் அமில-கார சமநிலையை சீர்குலைத்து, முகப்பரு மற்றும் பருக்களுக்குச் சருமத்தை மிகவும் பாதிக்கக்கூடியதாக மாற்றும்.
இது அவ்வளவு சுலபம் இல்லை என்றாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 5 வழக்கத்தைப் பின்பற்றவும், மணபெண்க்ள் எண்ணெய் சருமத்தைப் பராமரிக்கும் வழிகளைப் பார்க்கலாம்.
ஸ்க்ரப்பிங் செய்வது முகத்தை ஆழமாக சுத்தப்படுத்துகிறது, இறந்த சரும செல்களை நீக்குகிறது மற்றும் அதிகப்படியான எண்ணெயைத் தடுக்கிறது. அரிசி மாவு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் தயிர் போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி வீட்டில் ஒரு ஸ்க்ரப் செய்யலாம். கலவையை முகத்தில் தடவி மெதுவாக வட்ட இயக்கத்தில் தேய்க்கவும்.ஸ்க்ரப்பைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் கைகளில் பேட்ச் டெஸ்ட் செய்து, உங்களுக்கு முகப்பரு இருந்தால் அல்லது மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
Image Credit: Freepik
சுத்தப்படுத்தி, ஸ்க்ரப்பிங் செய்த பிறகு, ஃபேஸ் பேக் செய்ய வேண்டும். இது துளைகளை இறுக்க உதவும். முல்தானி மிட்டி, கடலை மாவு போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தலாம். பயன்பாட்டிற்கு முன் நீங்கள் ரோஸ் வாட்டருடன் கலக்கலாம்.
இது துளைகளை மூடவும், எண்ணெய் தன்மையை குறைக்கவும் உதவும். சிறந்த முடிவுகளுக்கு வாரத்திற்கு மூன்று முறை தடவலாம். அது முற்றிலும் காய்வதற்கு முன்பு அதைக் கழுவுவதற்கு மட்டுமே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் முயற்சி செய்யக்கூடிய மற்றொரு பேக், தயிர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் கடலை மாவை கலக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவவும்.
மேலும் படிக்க: கருமையை போக்கி சருமத்தை வெள்ளையாக்கும் வீட்டிலேயே செய்யக்கூடிய விதைகள் பேஸ் ஸ்க்ரப்
சுத்தப்படுத்திய பிறகு டோனிங் வருகிறது. ரோஸ் வாட்டர் ஒரு சக்தி வாய்ந்த சரும டோனர். இது துளைகளை இறுக்க செய்து எண்ணெய் சுரப்பதை குறைக்கும். உங்கள் துளைகளை ஆழமாக சுத்தம் செய்ய கிளைகோலிக், லாக்டிக் அமிலம் அல்லது தேயிலை மர எண்ணெய் போன்ற ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்களைக் கொண்ட ஆல்கஹால் இல்லாத டோனர் பயன்படுத்தலாம்.
இலகுவான மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் கடைசி நேரத்தில் முகப்பரு வெடிப்பதைத் தவிர்க்கலாம். மேலும், இத்தகைய மாய்ஸ்சரைசேஷன் உகந்த நீரேற்றத்தை உறுதிசெய்கிறது, சரும அடுக்கை ஆற்றுகிறது மற்றும் சருமத்திற்கு மற்ற நன்மைகளைச் சேர்க்கிறது. சிலிகான்கள் கொண்ட லிப் பாம் மற்றும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.
Image Credit: Freepik
தோல் பராமரிப்பின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று ஆரோக்கியமான உணவு. ஜங்க் மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகள் பெரும்பாலும் தோல் அடுக்கில் பிரேக்அவுட்கள் மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். மணப்பெண்கள் தங்கள் உணவில் சாலட், பழங்கள், தயிர் மற்றும் முழு தானியங்களைச் சேர்க்க வேண்டும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com