Dandruff Simple Remedies : பொடுகு பிரச்சனை நிரந்தரமாக ஒழிய வேண்டுமா? இதோ வழிகள்

பொடுகு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதை நிரந்தரமாக சரிசெய்ய என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

dandruff home remedy tips tamil

பொடுகு பிரச்சனை இருபாலரையும் விட்டு வைப்பதில்லை. பொடுகால் முடி உதிர்வு தொடங்கி, முகப்பரு என பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. பொடுகை ஆரம்ப கட்டத்திலே கவனித்து சிறந்த தீர்வை தந்தால் எளிதில் சரி செய்துவிடலாம் இல்லையெனில் அதன் தாக்கம் தலை முழுவதும் பரவி விடும். சிலருக்கு குளிர்காலத்தில் மட்டும் பொடுகு தோன்றும், சிலருக்கு தினமும் தேங்காய் எண்ணெய் வைத்தால் தலையில் பொடுகு சேரும். இப்படி பொடுகு ஏற்பட பல காரணங்கள் உள்ளன.

பொடுகு பிரச்சனையை சரிசெய்ய இயற்கை வைத்தியங்கள் பல உள்ளன. முடிக்கு எப்போதுமே கெமிக்கல் சிகிச்சையை காட்டிலும் இயற்கை வைத்தியங்கள் சிறந்தவையாக பார்க்கப்படுகின்றன. இயற்கை வைத்தியம் பொறுமையாக தீர்வை தந்தாலும், அதனால் எந்தவித பக்க விளைவும் முடிக்கு ஏற்படாது என நம்பப்படுகிறது. அந்த வகையில் இந்த பதிவில் பொடுகை சரிசெய்யும் இயற்கை வீட்டு வைத்தியங்கள் குறித்து பார்ப்போம்.

பொடுகுக்கு வீட்டு வைத்தியம்

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

தேங்காய் எண்ணெய் அரிப்பு மற்றும் பூஞ்சை தொற்றில் இருந்து நிவாரணம் அளிக்கும். தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறை சம அளவு சேர்த்து மிக்ஸ் செய்யவும். பின்பு அதை உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். சுமார் 10-15 நிமிடங்கள் கழித்து ஹேர் வாஷ் செய்யவும். இது பொடுகு தொல்லையில் இருந்து விடுபட உதவுவது மட்டுமல்லாமல், முடியின் வளர்ச்சியையும் ஊட்டச்சத்தையும் அதிகரிக்கும்.

தயிர்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் பொடுகை குறைக்க உதவுகிறது மற்றும் அதில் உள்ள புரதம் உங்கள் தலைமுடியை அதன் வேர்களில் இருந்து பலப்படுத்துகிறது. ஃபிரஷ் தயிரை தலைமுடியில் தடவி 15 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரால் கழுவவும். பொடுகு பிரச்சனை மறையும்.

வேப்பிலை

அனைத்து விதமான சரும பிரச்சனைகளுக்கும் வேப்பிலை சிறந்தது. அதே போல் தலையில் இருக்கும் பொடுகை விரட்ட, வேப்பிலையை நன்கு அரைத்து, தலையில் தடவி நன்கு தேய்த்து குளிக்கவும். பொடுகு 2 வாரத்தில் ஓடி விடும்.

hair home remedy

கற்றாழை ஜெல்

கற்றாழை இயற்கையான குளிரூட்டியாக செயல்படுகிறது. உச்சந்தலையில் குளிர்ச்சியை உண்டாக்குகிறது. கற்றாழை ஜெல்லை உங்கள் உச்சந்தலையில் தடவி, அரை மணி நேரம் விட்டுவிட்டு, பின்னர் ஷாம்பூ கொண்டு ஹேர் வாஷ் செய்யவும்.

ஆலிவ் ஆயில் மற்றும் வினிகர்

ஆலிவ் ஆயில் கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது, மேலும் பூஞ்சை தொற்று நோயிலிருந்து உச்சந்தலையை பாதுகாக்கிறது. இவை இரண்டையும் நன்கு மிக்ஸ் செய்து உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். பின்பு தலைமுடியை நார்மல் வாட்டரில் அலசி எடுக்கவும். கடைசியாக முடிக்கு கண்டிஷனரைப் பயன்படுத்துங்கள்.

நோட் பண்ணிக்கோங்க

  • பொடுகு இருக்கும் போது அதிக சர்க்கரை, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்
  • உங்கள் உச்சந்தலையை அடிக்கடி சொறிந்துவிடாதீர்கள்
  • உங்கள் தலைமுடியை வாரத்திற்கு 2-3 முறை அலசவும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP