herzindagi
drandruff big image

தாங்க முடியாத அரிப்புகளுடன் பொடுகு தொல்லையா? இந்த ஆப்பிள் வினிகரை பயன்படுத்தி அடியோடு நீக்கிடலாம்

பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுகிறீர்களா?  இயற்கையாகவே அதிலிருந்து விடுபட விரும்பினால் ஆப்பிள் சைடர் வினிகரைக் கொண்டு ஹேர் க்ளென்சர் செய்யலாம்
Editorial
Updated:- 2024-05-15, 17:39 IST

நாம் அனைவரும் ஏதாவது ஒரு முடி பிரச்சனையால் சிரமப்படுகிறோம். இதில் பொடுகு என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாகும். வறண்ட உச்சந்தலை, பூஞ்சை தொற்று, மன அழுத்தம் அல்லது உணவில் கவனம் செலுத்தாமை போன்ற காரணங்களால் பொடுகுத் தொல்லை ஏற்படலாம். பொடுகுத் தொல்லையால் அவதிப்படும் போது பெரும்பாலானோர் பொடுகு எதிர்ப்புப் பொருட்களை பயன்படுத்துவது பொதுவானதாகும்.

இந்த பொடுகு பிரச்சனையில் இருந்து இயற்கையான முறையில் விடுபட வேண்டுமானால் ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்தலாம். வினிகர் அதன் அமில பண்புகள் காரணமாக பொடுகுக்கு ஒரு சிறந்த சிகிச்சையாக இருக்கிறது. அது மட்டுமின்றி உச்சந்தலையின் pH அளவை சமநிலைப்படுத்தவும், பூஞ்சை வளர்ச்சியைக் குறைக்கவும் உதவுகிறது. இதன் மூலம் பொடுகுத் தொல்லையில் இருந்தும் பெருமளவு நிவாரணம் பெறலாம். எனவே இன்று இந்த கட்டுரையில் ஆப்பிள் சைடர் வினிகரின் உதவியுடன் ஹேர் க்ளென்சரை எவ்வாறு தயாரிப்பது என்பதை RVMUA அகாடமியின் நிறுவனரும், பிரபல ஒப்பனை கலைஞரும், தோல் பராமரிப்பு நிபுணருமான ரியா வசிஷ்ட் கூறியிருப்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க: முதல் முறை பயன்படுத்தும்போதே கழுத்து கருமையை நீக்க செய்யும் அற்புதமான வீட்டு வைத்தியம்

ஆப்பிள் வினிகர் மற்றும் அலோ வேராவுடன் க்ளென்சர் செய்யும் முறை 

ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் அலோ வேராவின் உதவியுடன் சுத்தப்படுத்திகளை உருவாக்கலாம். பொடுகு காரணமாக உச்சந்தலையில் அரிப்பு அதிகம் என்பதால் கற்றாழையின் மென்மையான பண்புகள் உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவும்.

தேவையான பொருட்கள்

1/4 கப் ஆப்பிள் சைடர் வினிகர்

1/4 கப் புதிய அலோ வேரா ஜெல்

தேவைக்கேற்ப தண்ணீர்

பயன்படுத்தும் முறை

முதலில் ஆப்பிள் சைடர் வினிகரை கற்றாழை ஜெல்லுடன் கலக்கவும்.

தயாரிக்கப்பட்ட கலவையை நீர்த்துப்போகச் செய்ய தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

இப்போது உங்கள் தலைமுடியை முதலில் ஷாம்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு தயாரிக்கப்பட்ட கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

சுமார் பத்து நிமிடம் இப்படியே விட்டுவிட்டு தலைமுடியை நன்றாகக் கழுவவும்.

ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தேன் கொண்டு க்ளென்சர் 

honey inside  ()

ஆப்பிள் சைடர் வினிகருடன் தேன் கலந்தும் க்ளென்சர் செய்யலாம். தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் உச்சந்தலையை ஆற்றவும், பொடுகை குறைக்கவும் முடியும்.

தேவையான பொருட்கள்

1/4 கப் ஆப்பிள் சைடர் வினிகர்

2 டீஸ்பூன் தேன்

தேவைக்கேற்ப தண்ணீர்

பயன்பாடுத்தும் முறை

முதலில் ஆப்பிள் வினிகரில் தேன் சேர்த்து கலக்கவும்.

இப்போது அதில் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.

உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்த பிறகு இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும்.

இப்போது சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு உங்கள் தலைமுடியைக் கழுவவும்.

ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தேயிலை மர எண்ணெய் 

apple vinegar inside

தேயிலை மர எண்ணெயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் காரணமாக பொடுகை நீக்க இதைப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க: முடி நல்ல நீளமும் வேண்டும், அடர்த்தியும் வேண்டுமா... இந்த வெந்தயம் மற்றும் வெங்காயத்தை இப்படி ட்ரை பண்ணுங்கள்

தேவையான பொருட்கள்

1/4 கப் ஆப்பிள் சைடர் வினிகர்

7-8 சொட்டு தேயிலை மர எண்ணெய்

தேவைக்கேற்ப தண்ணீர்

பயன்பாடுத்தும் முறை

க்ளென்சர் செய்ய முதலில் டீ ட்ரீ ஆயிலை ஆப்பிள் சைடர் வினிகரில் கலக்கவும்.

இப்போது அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.

தேயிலை மர எண்ணெய் ஒரு அத்தியாவசிய எண்ணெய் (தெங்காய் என்ணெய்/ நல்லெண்ணெய்) மற்றும் வினிகருடன் நேரடியாகப் பயன்படுத்துவது உங்கள் உச்சந்தலையில் தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்க.

இப்போது உங்கள் தலைமுடியை ஷாம்பு செய்த பிறகு இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

சுமார் 5-10 நிமிடங்களுக்குப் பிறகு முடியை நன்கு கழுவவும்.

இந்தக் கட்டுரையைப் பற்றிய உங்கள் கருத்தையும் கருத்துப் பெட்டியில் தெரிவிக்க வேண்டும். மேலும், இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik & Google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com