herzindagi
beetel leaf big

முடி வளர வேண்டுமா? இந்த வெற்றிலை வைத்தியத்தை முயன்று பாருங்களேன்!!!

முடி வளர்ச்சி குறித்த கவலையா? எனில், வெற்றிலையை பயன்படுத்தி முடி வளர்ச்சியை எப்படி பெறுவதென படித்தறிந்து பயன் பெறவும்.
Expert
Updated:- 2022-11-25, 12:00 IST

வெற்றிலையை வாய் துற்நாற்றத்துக்கு பயன்படுத்துவோம். அது மட்டுமல்லாமல், கடவுளை வழிபடவும் வெற்றிலை மாலை போடுவது வழக்கம். ஆனால், முடி வளர்ச்சிக்கும் வெற்றிலை உதவுமென சொன்னால் நம்புவீர்களா?

முடி வளர்ச்சி முதல் பொடுகு வரை என பல பிரச்சனைகளுக்கு வெற்றிலை சிறந்த தீர்வை வழங்குகிறது. வெற்றிலையை முடிக்கு நீங்கள் எப்படி பயன்படுத்துவது என்பதை ரேணு அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தேங்காய் எண்ணெய் உடன் வெற்றிலை

beetel leaf

தேவையான பொருட்கள்

  • வெற்றிலை - 5
  • தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

தயாரிப்பது எப்படி?

  • முதலில், வெற்றிலையை அரைத்துக்கொள்ளவும்
  • இப்போது ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொண்டு, 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கலந்து பேஸ்ட் போல ஆக்கிக்கொள்ளவும்

பயன்படுத்துவது எப்படி?

  • முதலில் முடியை அலசி காய வைக்கவும்
  • இப்போது அந்த பேஸ்டினை கொண்டு முடி மற்றும் உச்சந்தலையில் தேய்க்கவும்
  • 1 மணி நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு முடியை அலசவும்
  • வாரத்திற்கு 3 முறை இதனை பயன்படுத்தலாம்

நல்லெண்ணெய் உடன் வெற்றிலை

beetel leaf

தேவையான பொருட்கள்

  • வெற்றிலை - 4
  • நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
  • ரோஸ்மேரி இலைகள் - 2
  • துளசி இலைகள் - 3

தயாரிப்பது எப்படி?

  • முதலில் வெற்றிலையை அரைத்துக்கொள்ளவும்
  • இப்போது ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய், 2 ரோஸ்மேரி இலைகள் மற்றும் 3 துளசி இலைகளை சேர்த்து பேஸ்ட் ஆக்கிக்கொள்ளவும்
  • உங்கள் முடியை அலசிய பிறகு, இந்த பேஸ்டை தடவவும்

வெற்றிலையின் பயன்கள்

beetel leaf

வெற்றிலையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புள்ளது. மேலும், அலர்ஜி எதிர்ப்பு பண்பும் உள்ளது. இது முடி உதிர்தலை குறைக்கும். மேலும் முடி வளர்ச்சிக்கும் உதவும். இந்த தயாரிக்கும் பேஸ்ட்டை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வர முடி வளர்ச்சிக்கு அது உதவும்.

இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: shutterstock

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com