முகத்தில் வரும் பரு காரணமாகவும் உங்களின் அழகு குறைகிறது. இதற்கு தீர்வாக சில அற்புதமான டிப்ஸை நிபுணர்கள் உங்களுக்காக வழங்குகிறார்கள்.
பருக்கள் என்பது பெண்களின் சருமத்தில் வரும் பொதுவான பிரச்சனையாகும். எண்ணெய் பிசுபிசுப்பு அளவுக்கதிகமாக இருப்பதாலும் பருக்கள் ஏற்படுகிறது. இதன் காரணமாக முகத்தில் உள்ள சிறு துவாரங்கள் மூடிக்கொள்கின்றன, இறந்த சரும செல்கள் உருவாகின்றன, சருமத்தில் அலர்ஜி போன்றவையும் உண்டாகின்றன.
பருக்கள் பொதுவாக முகத்தில் வரும். இது எந்தவொரு பெண்ணின் அழகையும் பாழாக்கிவிடும். பருக்கள் எங்குள்ளது? அவை எப்படி வந்தது? எப்படி போக்குவது? என்பதனை நீங்கள் அறிந்தே தீர வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும், முன்னெச்சரிக்கையும், சிகிச்சையும் இதற்கு ஒன்று தான்.
உங்களுக்கு முகத்தில் பருக்கள் வரும்போது, அது குறித்து ஆயிரம் கேள்விகள் மனதில் எழும். பருக்கள் வருவதை எப்படி தடுப்பது? என்னென்ன டிப்ஸ் இதற்கு உதவும்? என்னென்ன வீட்டு வைத்தியம் இதற்காக உள்ளது? இப்படி பல கேள்விகள் உங்கள் மனதில் எழும். எனில், நீங்கள் இந்த பதிவை படிப்பதன் மூலமாக பல பயனுள்ள குறிப்புகளை அறியலாம்.
இந்த பதிவில் பருக்கள் வராமல் எப்படி தடுப்பது? எப்படி இதனை போக்குவது? போன்ற கேள்விகளுக்கு பதிலை பெற போகிறோம். இந்த டிப்ஸை ஆயுர்வேத மருத்துவ நிபுணர் சேத்தாலி அவர்கள், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இயற்கையாகவே பருக்கள் வராமல் சருமத்தை பராமரிப்பது எப்படி?
1. செரிமானமடையும் உணவை சாப்பிட வேண்டும்
உங்கள் வயிறும், முக அழகும் என இரண்டுமே உடல் ஆரோக்கியத்தோடு பின்னி பிணைந்தவை. காரமான, புளிப்பான, உப்பு சுவை மிகுந்த உணவை அதிகம் சாப்பிடும் பெண்களுக்கு பருக்கள் வருகிறது. அதனால், இது போன்ற உணவை தவிர்ப்பது நல்லது.
2. நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ளவும்
நீர்ச்சத்தினை நீங்கள் தக்க வைத்துக்கொள்வதால், பளபளக்கும் சருமத்தை பெறலாம். உங்கள் உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் தேவையான அளவு நீர்ச்சத்து இருக்க வேண்டியது அவசியம். இல்லையேல், உடல் வறண்டு சோர்வை ஏற்படுத்திவிடும். உங்கள் சருமத்திற்கும் இதே நிலை தான். சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்.
3. பிராணயாமம் செய்யவும்
மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் சமநிலை அற்று இருத்தல் காரணமாக பருக்கள் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் மோசமடையலாம். அதனால், நெகட்டிவாக யோசிப்பதை தவிர்க்கவும். மேலும் மனஅழுத்தமின்றி உங்களுடைய உடலையும், மனதையும் வைத்துக்கொள்ள முயல வேண்டும். உடல் செயல்பாடுகள் பருக்களை போக்குவதோடு, சருமத்தை மேம்படுத்தவும் உதவும். ஆயுர்வேதாவின்படி, பிராணயாமமும், தியானமும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபட உதவுகின்றன.
4. முகம் அலச ஐஸ் வாட்டர்
உங்களுக்கு எண்ணெய் பிசுபிசுப்புடன் கூடிய சருமம் எனில், பருக்கள் அதிகம் வர வாய்ப்புள்ளது. நீங்கள் தினமும் ஒருமுறை ஐஸ் வாட்டரில் முகத்தை அலச வேண்டும்.
5. ஆர்கானிக் மற்றும் ஆயுர்வேத பேஸ் மாஸ்க்
ஆயுர்வேதத்தில், சருமம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு மூலிகை உள்ளது. இவை பருக்கள் வராமல் தடுப்பதோடு, சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஆர்கானிக் மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் கொண்டு உருவாக்கப்பட்ட பேஸ் மாஸ்குகளை பயன்படுத்துவதன் மூலம் கெமிக்கல் தயாரிப்புகளில் இருந்து விலகி இருக்க முடியும்.
இவை அனைத்தையும் விட, முகத்தை அழகாக வைத்துக்கொள்ள இன்னொரு முக்கியமான விஷயம் உள்ளது. அது தினமும் காலையில் எழுந்தவுடன் கண்ணாடி முன்பு நின்று உங்கள் அழகை ரசிப்பது தான். இந்த தீர்வுகளை மற்ற தோழிகளுடனும் பகிர்ந்துக்கொள்ளலாமே.
ஒருவேளை பருக்கள் வெகு நாட்களாக உங்களுக்கு இருப்பின், அப்போது மருத்துவரின் ஆலோசனையுடன் முறையாக சிகிச்சை பெறுவது நல்ல முடிவை அளிக்கும்.
உங்கள் முகத்தில் உள்ள பருக்களை போக்க இந்த பதிவு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Image Credit: freepik, shutterstock
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation