கரித்தூள் சோப்பு பயன்படுத்துவது நல்லதா? உங்கள் சருமத்திற்கு என்ன ஆகும் தெரியுமா?

இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சோப்புகள் சருமத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. இத்தகைய சோப்புகளில் கரித்தூள் சோப்பு (Charcoal Soap) தற்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளது. 
image

நம் அன்றாட வாழ்வில் சோப்பு என்பது தவிர்க்கமுடியாத ஒரு பொருளாகும். பல்வேறு வாசனைகள் மற்றும் வண்ணங்களில் சோப்புகளை நாம் தினசரி பயன்படுத்துகிறோம். ஆனால் சருமத்திற்கு மென்மையைத் தரவும், எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் இருக்கவும் சரியான சோப்பைத் தேர்ந்தெடுப்பது ரொம்ப முக்கியம். சருமத்தின் pH மதிப்பை சமநிலைப்படுத்தக்கூடிய சோப்புகளை பயன்படுத்துவது சருமத்திற்கு நல்லது. அடிக்கடி சோப்புகளை மாற்றி பயன்படுத்துவதால் சருமத்தில் எரிச்சல், ஒவ்வாமை, அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த நிலையில் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சோப்புகள் சருமத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. இத்தகைய சோப்புகளில் கரித்தூள் சோப்பு (Charcoal Soap) தற்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளது. இதை பயன்படுத்தி வந்தால் சருமத்திற்க்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்க்கலாம்.

சருமத்தில் துளைகளை ஆழமாக சுத்தம் செய்கிறது:


கரித்தூள் சோப்பில் உள்ள செயல்படுத்தப்பட்ட கரி (Activated Charcoal) ஒரு காந்தம் போல் செயல்பட்டு தோலின் துளைகளில் சிக்கியுள்ள அழுக்கு, எண்ணெய் மற்றும் அசுத்தங்களை வெளியேற்றுகிறது. இது பிளாக்ஹெட்ஸ், வைட்ஹெட்ஸ் மற்றும் முகப்பரு உண்டாவதை தடுக்கிறது.

still-life-ashes-with-charcoal_23-2149631265

அதிக எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தும்:


எண்ணெய் தோல் கொண்டவர்களுக்கு கரித்தூள் சோப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது சருமத்தில் உள்ள தேவையற்ற எண்ணெயை உறிஞ்சி, தோலை வறண்டுபோகாமல் மென்மையாக சமநிலைப்படுத்துகிறது. இதனால் முகத்தில் அதிக பளபளப்பு ஏற்படுவதை உறுதி செய்கிறது.

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கும்:


கரித்தூள் சோப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் அழற்சி குறைப்பு பண்புகள் உள்ளன. இது முகப்பரு உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்து, சிவத்தல் மற்றும் வீக்கத்தை குறைக்கிறது. இந்த கரித்தூள் சோப்பை தொடர்ந்து பயன்படுத்தினால் முகப்பரு தழும்புகளும் குறையும்.

இறந்த சரும செல்களை நீக்குகிறது:


கரித்தூள் சோப்பின் இயற்கையான அமைப்பு மெதுவாக தோலில் இருந்து இறந்த செல்களை அகற்றுகிறது. இது புதிய செல்கள் உருவாக உதவி, மென்மையான, பிரகாசமான மற்றும் சீரான நிறம் கொண்ட தோலை பெற உதவுகிறது.

மேலும் படிக்க: வலுவான ஆரோக்கியமான தலை முடி வேண்டுமா? ரோஸ்மேரி எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க

தோலில் இருந்து நச்சுகளை வெளியேற்றும்:


நச்சுக்கள் மற்றும் மாசுக்கள் தோலின் துளைகளை அடைத்து நம் தோலை மங்கலாக்குகின்றன. கரித்தூள் சோப்பு இந்த நச்சுகளை வெளியேற்றி தோலை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும்.

beauty-portrait-adorable-half-naked-woman-with-perfect-skin-looking_171337-509

இந்த நிலையில் கரித்தூள் சோப்பு சருமத்திற்கு ஆழமான சுத்திகரிப்பு, எண்ணெய் கட்டுப்பாடு, முகப்பரு சிகிச்சை, இறந்த செல் நீக்கம் மற்றும் நச்சு நீக்கம் போன்ற பல நன்மைகளை தருகிறது. பெரும்பாலான தோல் வகைகளுக்கு இந்த கரித்தூள் சோப்பு ஏற்றதாக இருப்பதால், வாரத்தில் 2 அல்லது 3 முறை பயன்படுத்தலாம்.

Image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP