பால் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. இது பல சமையால் பொருட்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சிலர் பால் பவுடரைப் பயன்படுத்தி தங்கள் உணவுகளை தயாரிக்க விரும்புகிறார்கள். ஆனால் பால் பவுடரில் சமையலறையில் மட்டும் பயன் தரவில்லை சருமத்திற்கும் நல்லது பலனை தருகிறது. பாலில் லாக்டிக் அமிலம் உள்ளதால் சருமத்திற்கு ஊட்டச்சத்து மற்றும் ஈரப்பதத்தை வழங்க உதவுகிறது. இதுவரை நாம் பச்சைப் பாலை மட்டுமே நம் சருமத்தில் தடவுகிறோம். ஆனால் பால் பவுடர் உங்கள் சருமத்திற்கும் சமமாக நன்மை பயக்கும். பால் பவுடர் உதவியுடன் பலவிதமான பேக்குகளை உருவாக்கி அவற்றை சருமத்தில் தடவி மென்மையாக்கலாம்.
பால் பவுடர் ஒரு லேசான எக்ஸ்ஃபோலியேட்டராக செயல்படுகிறது. உங்கள் சருமத்தை மேலும் மென்மையாகவும், சுத்தமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இயற்கையான முறையில் உங்கள் சருமத்தை மென்மையாக்க விரும்பினால், உங்கள் சருமத்தில் பால் பவுடரைப் பயன்படுத்தலாம்.
சருமத்தை நீண்ட நேரம் இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க விரும்பினால், பால் பவுடரைப் பயன்படுத்துவது நிச்சயமாக மிகவும் நல்லது. பால் பவுடர் கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க செய்யும் காரணத்தால் சருமம் நீண்ட நேரம் இளமையாகத் தெரிகிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது, இதன் காரணமாக சருமம் இயற்கையாகவே பளபளப்பாக இருக்கும்.
மேலும் படிக்க: பெண்களின் மிக பெரிய பிரச்சனையாக இருக்கும் முக கருமையை போக்கி வெள்ளையாக மாற்றும் அதிமதுரம் பொடி
வறண்ட சருமம் இருந்தால், அதை இயற்கையாகவே ஈரப்பதமாக்க விரும்பினால், பால் பவுடரைப் பயன்படுத்தலாம். பால் பவுடர் மந்தமான மற்றும் சேதமடைந்த சருமத்தை அகற்ற உதவியாக இருக்கும். நீங்கள் இதை தொடர்ந்து பயன்படுத்தும்போது சருமத்தை குழந்தை போல மென்மையாக்குகிறது.
நாம் அனைவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் பழுப்பு நிறம் மற்றும் சீரற்ற சரும நிறப் பிரச்சினையை எதிர்கொள்கிறோம். ஆனால் இதை இயற்கையான முறையில் கையாள விரும்பினால், பால் பவுடரால் செய்யப்பட்ட ஃபேஸ் பேக்கை சருமத்தில் தடவ வேண்டும். நீங்கள் அதை உங்கள் சருமத்தில் பயன்படுத்தும்போது, அது படிப்படியாக சருமத்தை இலகுவாகவும் பிரகாசமாகவும் மாற்றுகிறது. பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தை பளபளப்பாக்க உதவுகிறது.
மேலும் படிக்க: எண்ணெய் பசை சருமத்துடன் கருமையும் சேர்ந்து வந்தால் இந்த மைசூர் பருப்பு ஃபேஸ் பேக் அனைத்தையும் தீர்க்கும்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com