தற்போதைய நவீன காலத்து பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை என்பது தலைமுடி உதிர்வு தலைமுடி வளர்ச்சி இல்லாமல் இருப்பது தான். பெரும்பாலான பெண, தங்களின் முகம் அழகாக தோற்றமளிக்க வேண்டும். குறிப்பாக பல பேர் மத்தியில் முகப்பொலிவாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதே போல, கூந்தலும் நீளமாக இருக்க வேண்டும். அதிலும் அடர் கருப்பு கருப்பு நிறத்தில் பொடுகு, பேன்கள், அரிப்பு உள்ளிட்ட தொல்லைகள் இல்லாமல் பல பலப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இதற்காக பெரும்பாலான பெண்கள் பல்வேறு விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள், அதிலும் ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தியும் எந்தவித முடி வளர்ச்சியும் முன்னேற்றமும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
மேலும் படிக்க: முடி கொட்டுவதை நிறுத்தி கூந்தல் வலுமாக, அடர்த்தியாக, கருகருன்னு வளர செம்பருத்திப் பூ ஹேர் பேக்
தலைமுடி நீளமாக வளர வேண்டும் முடி உதிர்வு பிரச்சனை முற்றிலும் இருக்கக் கூடாது என்றால் எப்போதுமே அழகு சாதன பொருட்களை மட்டும் நம்பி இருக்காமல் சில இயற்கையான வழிகளை பெண்கள் கையாள வேண்டும்.
இயற்கையின் வரப்பிரசாதமாக இருக்கும் சில பொருட்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்து, முடி உதிர்தல் பிரச்சனை முற்றிலும் தடுத்து, பெண்களின் கூந்தலில் இருக்கும் ஒட்டுமொத்த பிரச்சினையையும் போக்கும் வல்லமை கொண்டது. ஆனால் அந்த இயற்கையான பொருட்களை சரியான முறைகளில் நாம் கையாள வேண்டும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அவை என்னென்ன கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? எந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
கற்றாழை செடியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொட்டி கிடக்கின்றன. தற்போதைய நவீன காலத்திலும் கூட கற்றாழையில் உள்ள ஜெல்லை பயன்படுத்தி முகத்தை அழகுப்படுத்த பெரும்பாலான பெண்கள் பல்வேறு வழிகளில் கற்றாழையை பயன்படுத்துகிறார்கள். கற்றாழையில் இருக்கும் சில ஊட்டச்சத்து மூலக்கூறுகள் முடி உதிர்வை முற்றிலும் தடுத்து நீளமான கூந்தலை தரக்கூடிய வல்லமை உள்ளது. கற்றாழையை நீங்கள் இந்த வழிகளில் பயன்படுத்தினால் உங்கள் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து உங்கள் கூந்தலை இரண்டு மடங்கு நீளமாக வளர செய்யலாம். முடி நமது முழு ஆளுமையையும் பாதிக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு நபரும் நீண்ட, அடர்த்தியான மற்றும் மென்மையான முடியை விரும்புகிறார்கள். ஆனால் பல காரணங்களால் மக்கள் விரும்பிய முடியைப் பெற முடிவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் தங்கள் முடியின் நீளத்தை அதிகரிக்க பெரும்பாலும் முடி பராமரிப்பு சிகிச்சையை எடுத்துக்கொள்கிறார்கள்.
முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, நீங்கள் கற்றாழை, ஆமணக்கு எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை ஒன்றாக கலந்து தடவலாம். இதற்கு, 5-6 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஆமணக்கு எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ காப்ஸ்யூல் எண்ணெயைச் சேர்க்கவும். இப்போது இவை அனைத்தையும் நன்றாக கலக்கவும். அதை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவவும். ஒரு மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பூவுடன் தலைமுடியைக் கழுவவும். இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்துவது முடி வளர்ச்சிக்கு உதவும். மேலும், முடி மென்மையாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் மாறும்.
மேலும் படிக்க: கண்ட்ரோல் இல்லாம முடி கொட்டுதா? 15 நாட்களில் மீண்டும் வளரச் செய்ய இந்த பொடியை தயாரித்து குடியுங்கள்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil
image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com