Aloe Vera Powder Benefits : முகத்திற்கு கற்றாழை பவுடர் தரும் அற்புத பயன்கள்

முகத்திற்கு கற்றாழை பவுடர் தரும் அற்புத பயன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். கற்றாழை பவுடரை எப்படி முகத்திற்கு தடவ வேண்டும்? என்பதையும் தெரிந்து கொள்வோம்.

aloe vera powder skin

கற்றாழை ஜெல்லை பற்றி அறிமுகமே தேவையில்லை. எல்லோருக்கும் தெரியும். ஆனால் கற்றாழை பவுடர் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் கற்றாழை பவுடன் ஏகப்பட்ட நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக பெண்களின் சருமம் மற்றும் முகத்திற்கு கற்றாழை பவுடன் தரும் நன்மைகள் ஏராளமகற்றாழை பவுடர் பல அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. ஜெல்லில் 96% திரவம் அல்லது கரிம மற்றும் கனிம கலவைகள், அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. உலர்த்தி, பொடியாக அரைக்கும்போது அந்த அனைத்தும் பவுடரிலும் கிடைக்கும்.

சருமத்திற்கு கற்றாழை பவுடரை எவ்வாறு பயன்படுத்துவது?

கற்றாழை பவுடரை உங்கள் வழக்கமான அழகுசாதனப் பொருட்களில் கலந்து பயன்படுத்தலாம். வறண்ட சருமத்திற்கு, மாய்ஸ்சரைசர் அல்லது கிரீம் உடன் கலக்கவும் டோனிங்கிற்கு, டோனருடன் கலக்கவும் வெயிலுக்கு, வெயிலுக்கு கிரீம் அல்லது லோஷனிலும் சேர்க்கலாம். சுத்தமான அல்லது மினரல் வாட்டருடன் கலக்கவும். இபப்டி பல வகைகளில் இதை மிக்ஸ் செய்து முகத்தில் தடவலாம்.

முடிக்கு கற்றாழை பவுடரை எப்படி பயன்படுத்துவது?

முடி வளர்ச்சியை மேம்படுத்தவும், முடி உதிர்தலைத் தடுக்கவும், பொடுகுத் தொல்லையைக் குறைக்கவும் இந்த தூள் உதவுகிறது. இந்த பொடியை நீங்கள் பல வழிகளில் பயன்படுத்தலாம், தனியாக அல்லது மற்ற பொருட்களை சேர்த்து முடியில் தடவலாம்.

aloe vera for skin

கற்றாழை பவுடரை ஏன் பயன்படுத்த வேண்டும்?

இயற்கையான பொருள் என்பதால் சருமத்திற்கு எந்தவித பாதிப்பையும், ஆபத்தையும் ஏற்படுத்தாது. அதுமட்டுமில்லை இதனால் முகம் மென்மையாக்,அ மாறும். சருமம் பளீச்சிடும். வறண்ட சருமம் சரியாகும்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP