இந்த கிரீமை இரவில் 2 சொட்டு முகத்தில் தடவி பாருங்க காலையில் முகம் தங்கம் போல் ஜொலிக்கும்

வியர்வையால் எண்ணெய் பசை, அழுக்கு சேர்ந்து முகம் கருமையடைந்து விட்டதா? எப்போதுமே முகம் மந்தமாக தோற்றம்ளிக்கிறதா? இந்த பதிவில் உள்ளது போல் உங்களுக்கான சொந்த நைட் க்ரிமை தயாரித்து, இரவு தூங்கும் முன் முகத்தில் தடவுங்கள் மறுநாள் காலை எழுந்து முகத்தை கழுவும் போது உங்கள் முகம் தங்கம் போல ஜொலிக்கும். 15 நாட்களில் உங்கள் முகம் ஹீரோயின் போல மாறும்.
image

நைட்ல படுக்க போறதுக்கு முன்னாடி ரெண்டே ரெண்டு சொட்டு மட்டும் இந்த கிரீமை அப்ளை பண்ணிட்டு வந்து பாருங்க காலைல எந்திரிக்கும் போது உங்களுடைய முகம் தங்கம் போல நல்ல பிரைட்டா ஜொலிக்கும். இது ஒரு அருமையான ஹோம் மேட் நேச்சுரல் கிரீம், நீங்கள் இதை தினமும் இதை பயன்படுத்தும் போது அவ்ளோ அழகா உங்களுடைய முகம் நல்லா ப்ரைட்டா ப்ளூவா மாற ஆரம்பிக்கும். இது குறிப்பாக இளம் வயதினருக்கு நல்ல முடிவுகளை கொடுக்கும் குறிப்பாக இளம் பெண்கள் இளைஞர்கள், (30 வயதினர்) ஏனென்றால் இந்த வயதில் இருப்பவர்கள் தான் தங்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டும் என பல்வேறு ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள் அதிலும், ஒரு சிலர் விலை உயர்ந்த சலூன் பாரலர்களுக்கு சென்று முகத்தை அழகு படுத்துவார்கள்.

இந்த பதிவில் உள்ளது போல இயற்கையான நைட் க்ரீமை நீங்கள் வீட்டிலேயே தயாரித்து ஒரு 15 நாள் தொடர்ச்சியாக இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவி தூங்கச் செல்லுங்கள் மறுநாள் காலை உங்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.

இந்த கிரீமில் முதுமையை தள்ளி வைக்கும் தன்மை உள்ளது குறிப்பாக முகத்தில் உள்ள எண்ணெய் பசை, அழுக்கு வியர்வையால் ஏற்படும் முகச்சுருக்கம், அனைத்தும் மறைய செய்து முகத்தை ப்ரைட்டாக மாற்றும் தன்மை கொண்டது. இதைத்தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தும் போது முகத்தில் ஏற்படும் நிறமாற்றம் குறிப்பாக பிக்மெடேஷன் ஆகியவற்றை தடுக்கும் வல்லமை இயற்கையாகவே கொண்டது.

இயற்கையான பாதாம் நைட் கிரீம் செய்முறை

almond-and-saffron-face-cream-for-night-use-01

தேவையான பொருட்கள்

  • பாதாம் பருப்பு 10- 15 இரவு முழுவதும் ஊற வைத்தது
  • (பாதாம் பருப்பு மேலே உள்ள தோலை நீக்கிவிடவும்)
  • பால் இரண்டு டீஸ்பூன்

செய்முறை

  1. ஒரு மிக்ஸி பிளண்டரில் ஊற வைத்த பாதாம் பருப்பை சேர்த்து அதோடு இரண்டு டீஸ்பூன் பச்சை பாலை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  2. பின்னர் அதை நன்றாக அரைக்கவும்.
  3. இதனுடன் அலோவேரா ஜெல்லை ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்.
  4. இதை அப்படியே குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கலாம்.
  5. இரவு தூங்கும் முன்பு நீங்கள் தயாரித்த இந்த நைட் கிரீமை தடவி விட்டு தூங்கவும்.
  6. மறுநாள் காலை எழுந்து பார்த்ததும் உங்கள் முகம் பளபளப்பாக ஜொலிக்கும்.
  7. பாதாம் பருப்பில் உள்ள வைட்டமின் ஈ - யில் உள்ள தன்மை முகத்தில் கொலாஜன் உற்பத்தியை செய்யும். இதனால் முகத்தில் நல்ல பளபளப்புடன் கூடிய நெகழ்வுத் தன்மை கிடைக்கும். இதனால் உங்கள் முகம் இயற்கையாகவே பளிச்சென்று இருக்கும். மேலும் இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றும்.
  8. முகத்தில் உள்ள தோல்களை, சருமத்தை உடனடியாக பளபளப்பாக ஜொலிக்க வைக்கும் தன்மை பாதாம் பருப்பில் உள்ளது.

பாதாம் எண்ணெய் கலந்த முக க்ரீம்

maxresdefault (54)
தேவையான பொருட்கள்

  • பாதாம் - 8 விதைகள்
  • பாதாம் எண்ணெய் - 3 டீஸ்பூன்
  • வைட்டமின் ஈ - 2 காப்ஸ்யூல்கள்
  • கற்றாழை ஜெல் - 2 டீஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் - 3 டீஸ்பூன்

தயாரிப்பு முறை

  1. முந்தைய நாள் இரவு சுமார் எட்டு பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. பின்னர், ஊறவைத்த பாதாமை கவனமாக உரிக்கவும்.
  3. தோல் உரித்து விதை நீக்கிய தோலை ஒரு பிளெண்டரில் போட்டு, இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டரைச் சேர்த்து, நன்றாக அரைக்கவும். பின்னர் பாதாம் விழுதை நன்றாக பிழிந்து சாறு எடுக்கவும்.
  4. பின்னர் இந்த பாதாம் சாற்றில் இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெயைச் சேர்க்கவும்.
  5. மேலும், இரண்டு வைட்டமின் காப்ஸ்யூல்களில் இருந்து கரைசலைச் சேர்த்து கலக்கவும். அதனுடன் சிறிது கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் போல ஆக்குங்கள்.
  6. பின்னர் அதை மற்றொரு சிறிய பெட்டியில் வைத்து உங்கள் முகத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும்.
  7. இந்த கிரீமை இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் முகத்தில் தடவி, காலையில் கழுவலாம். இருப்பினும், படுக்கைக்குச் செல்வதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு அதைப் பூசிவிட்டு, பின்னர் படுக்கைக்குச் செல்வது நல்லது. இந்த க்ரீமை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் சுமார் இருபது நாட்கள் வரை வைத்திருக்கலாம்.

முகத்திற்கு பாதாம் கலவை நன்மைகள்

Untitled design - 2025-04-08T184213.918

  • பாதாம் , தோல், உடல், முடி மற்றும் நகங்களுக்கு நன்மை பயக்கும். 100% தூய்மையான மற்றும் கரிம, வைட்டமின் E உடன் கூடிய இந்த இயற்கை கலவை உங்கள் சருமத்திற்கு மிகவும் ஊட்டமளிக்கும் டானிக் ஆகும். எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றுவதிலிருந்து தீவிர ஈரப்பதமாக்குவது வரை, ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும், வறட்சியிலிருந்து விடுபடவும் செய்கிறது.
  • 100% இயற்கை பாதாமின் மகிழ்ச்சியிலும் அதன் ஊட்டச்சத்திலும் உங்கள் சருமம் மூழ்கட்டும். உங்கள் சருமத்தின் தாகத்தைத் தணித்து, வறட்சியைப் போக்க, கடுமையான கோடையிலும் உங்கள் சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும்.
  • பாதமில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நமது சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. பாதாம் சருமத்தை ஈரப்பதமாக்கி, ஈரப்பதமாக்க உதவுகிறது, கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
  • பாதாமில் வைட்டமின் 'E' அதிகமாக உள்ளது, இது சருமத்தைப் பாதுகாப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். சூரிய ஒளியால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அவை ஒரு சஞ்சீவியாகவும் உள்ளன.
  • கற்றாழை ஜெல்லில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன, இது சருமத்தை பிரகாசமாக்க உதவுகிறது. கூடுதலாக, ரோஸ் வாட்டர் இயற்கையாகவே தயாரிக்கப்பட்ட ஒரு தீர்வாகும், எனவே இது ஒரு அழகு சாதனப் பொருளாகவும் செயல்படுகிறது.
  • எனவே, பாதாம் விதைகளிலிருந்து தயாரிக்கப்படும் இந்த கிரீம் உங்கள் சருமத்தில் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் உங்கள் அழகை மேம்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் படிக்க:சருமத்தின் அழகை அதிகரிக்க குளிப்பதற்கு முன் துளசியை இப்படி ஃபேஸ் பேக்காக முகத்தில் பூசிக் கொள்ளுங்கள்

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil

image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP