வீட்டில் மயிலிறகை இந்த இடத்தில் வைத்திருந்தால் அற்புத நன்மைகள் நிகழும்!
Alagar Raj AP
15-10-2024, 16:28 IST
www.herzindagi.com
கிருஷ்ணர், முருகன், விநாயகர், இந்திரன் போன்றோர் கடவுள்கள் தலையில் மயிலிறகை சூடியிருப்பார்கள். இப்படி தெய்வீக தன்மை கொண்ட மயிலிறகு இந்து மதத்தில் மங்களகரமானதாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் மயிலிறகை வைத்திருந்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.
நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
புராணங்களின்படி, மயில் இறகுகள் எந்த இடத்திலும் உள்ள தீய சக்தியை அகற்றும் என்று கூறப்படுகிறது. இது வீட்டில் இருப்பதால் எதிர்மறை ஆற்றல் குறைந்து நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
நிதி நிலை மேம்படும்
பணம் நகை வைக்கும் பீரோவில் மயிலிறகை வைத்திருந்தால் வீடு என்றென்றும் செழிப்புடன் இருக்கும்.
துணையுடன் உறவு மேம்படும்
படுக்கை அறையில் மயிலிறகுகளை வைத்திருத்தல் கணவன் மனைவிக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதோடு அவர்களுக்கிடையே அன்பையும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
பிணைப்பை ஏற்படுத்தும்
வீட்டின் பிரதான அறையில் நான்கு, ஐந்து மயில் இறகுகளை சேர்த்து வைத்தால் குடும்ப உறுப்பினர்களிடம் அன்பும் மற்றும் பிணைப்பும் அதிகரிக்கும்.
நவகிரக தோஷம் நீங்கும்
வீட்டின் கிழக்கு மற்றும் வடமேற்கு சுவர்களில் மயில் இறகுகளை வைத்தால் நவகிரக தோஷம் நீங்கும் என நம்பப்படுகிறது.
திருஷ்டி நீங்கும்
வீட்டின் பிரதான நுழைவாயில் மேல் மயிலிறகை ஒட்டி வைத்தால் திருஷ்டி தோஷம் நிவர்த்தியாகும்.