சனிபகவானின் சிலையை ஏன் வீட்டில் வைக்கக் கூடாது தெரியுமா?


S MuthuKrishnan
31-07-2024, 11:32 IST
www.herzindagi.com

    எல்லோர் வீட்டிலும் பூஜை அறையில் கடவுள் சிலைகள் இருக்கும். ஆனால் சனி பகவானின் சிலை நம் வீடுகளில் வைப்பதில்லை.

Image Credit : google

    சனிபகவான் நியாயதேவ் என்று அழைக்கப்படுகிறார். சனிபகவானின் சாதகம் இருந்தால் ஏழை கூட ராஜாவாகலாம். ஆனால் வீட்டில் சனி பகவானின் சிலையை வைத்து வழிபாடு செய்யப்படுவதில்லை.

Image Credit : google

    சனி பகவான் கிருஷ்ணரின் பக்தர். அவர் எப்போதும் கிருஷ்ணரின் நினைவிலேயே இருந்தார் என புராணங்கள் கூறுகிறது.

Image Credit : google

    ஒரு நாள் சனி பகவானின் மனைவி பிரசவ வழியில் இருந்துள்ளார். அப்போது எவ்வளவு முயன்றும் அவளால் சனிபகவானின் கவனத்தை திசை திருப்ப முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவள் சனி பகவானை சபித்தாள்.

Image Credit : google

    தன் தவறை உணர்ந்த சனி பகவான் தன் மனைவியிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் சாபத்தை போக்க வழி இல்லை.

Image Credit : google

    அதனால்தான் வீட்டில் சனி பகவானை வழிபடுவதில்லை கோவிலுக்கு சென்று வழிபடுவது மட்டும்தான்.

Image Credit : google

    அதுமட்டுமின்றி சனிபகவானின் கண்களைப் பார்த்தால் தீமை நடக்கும் என நம்பப்படுகிறது. அதனால்தான் சனி பகவானை பாதங்களில் இருந்து வழிபடுகிறோம்.

Image Credit : google

    சனியின் பார்வை பட்டு, நமக்கு தீங்கு ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதாலேயே சனி பகவானின் படம் அல்லது சிலையை யாரும் வீட்டில் வைத்து வழிபடுவது கிடையாது. சனி பகவானை கோவிலில் சென்று மட்டுமே வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.

Image Credit : google

    கோவிலுக்கு சென்று சனி பகவானை வழிபடும் போதும் எப்போதும் சனியை நேருக்கு நேராக நின்று, அவரின் முகத்தை பார்த்து வணங்கக் கூடாது. பக்கவாட்டில் நின்று, சனி பகவானின் பாதங்களை பார்த்து மட்டுமே வழிபட வேண்டும்.

Image Credit : google