வீட்டில் எதிர்மறை எண்ணங்களை அகற்ற வேண்டுமா? இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்க!


Jansi Malashree V
10-08-2024, 19:36 IST
www.herzindagi.com

    எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதற்கு சில விஷயங்களை உங்களது வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். இதோ அவற்றில் சில உங்களுக்காக..

வீட்டை சுத்தமாக வைத்தல்:

    வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்தாலே லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். செல்வ செழிப்புடன் இருந்தாலே எப்போதும் பாசிடிவ் எனர்ஜியைப் பெறுவீர்கள்.

இறை வழிபாடு:

    தினமும் காலை அல்லது மாலை என இருவேளைகளிலும் இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டும். மன நிம்மதியுடன் இருந்தாலே எதிர்மறை எண்ணங்கள் உங்களை விட்டு நீங்கும்.

குப்பைகளை அகற்றுதல்:

    வீட்டின் மூலையில் எப்போதும் குப்பைகளை வைக்கக்கூடாது. அதே சமயம் மாலை 6 மணிக்குள் குப்பைகளை வெளியில் தள்ளக்கூடாது.