அட்சய திருதியையில் தங்கம் வாங்க நல்ல நேரம் எப்போது?


Alagar Raj AP
17-04-2025, 15:44 IST
www.herzindagi.com

அட்சய திருதியை

    ஒவ்வொரு மாதமும் வருகிற அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை காலத்தில் 3வது திதியாக வருவது திருதியை. அதுவே சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது.

அட்சய திருதியை 2025

    பஞ்சாங்கத்தின்படி, 2025 ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 29ஆம் தேதி மாலை 5.31 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி பிற்பகல் 2.12 மணிக்கு முடிகிறது. உதய தேதியின்படி, இந்த பண்டிகை ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்படும்.

தங்கம் வாங்க நல்ல நேரம்

    நகை வாங்க ஏப்ரல் 30ஆம் தேதி காலை 05.41 மணி முதல் மதியம் 12.18 மணி வரை நல்ல நேரம் உள்ளது.

நற்பலன்கள் பெருகும்

    இந்து மதத்தில் அட்சய திருதியை என்றால் அள்ள அள்ள குறையாமல் பெருகுவது என்று பொருள். இந்த புனிதமான நாளில் தங்கம் வாங்கினால் தங்கம் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். அதே போல் அட்சய திருதியையில் திருமணம், வீடு, வாகனம் அல்லது சொத்து வாங்குவது, தொழில் தொடங்குவது போன்ற செயல்களை செய்வதும் நற்பலன்களை அளிக்கும்.

இறைவழிபாடு

    செல்வத்தை அள்ளிக் கொடுக்கும் லட்சுமி தேவியையும் குபேரரையும் வழிபட சிறந்த நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணு பகவானை வழிபட்டால் மகிழ்ச்சி பெருகும்.

என்ன வாங்கலாம்

    அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க முடியாதவர்கள் மகா லட்சுமியின் அம்சமாக கருதப்படும் உப்பை வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும், லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். மேலும் கால்நடைகள், புத்தகங்கள், அரிசி, பாத்திரங்களும் வாங்கலாம்.

என்ன செய்யக்கூடாது

    இந்த நாளில் கடன் வாங்கினால் அது மேன்மேலும் அதிகரித்து நமக்கு பெரும் சுமையாக மாறும். அசைவ உணவுகள், மது போன்ற போதை பொருட்களை தவிர்க்க வேண்டும்.

தானம்

    அட்சய திருதியை அன்று தானம் செய்வது முக்கிய அம்சமாகும். பருப்பு, கோதுமை, அரிசி, சோளம், பார்லி தினை போன்ற தானியங்களை தானம் செய்தால் தெய்வீக பலன்கள் மற்றும் செழிப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.