விநாயகர் சதுர்த்தி: என்னென்ன உணவுகளை படைத்து பிள்ளையாரை வழிபடலாம்?


Alagar Raj AP
05-09-2024, 14:00 IST
www.herzindagi.com

உணவுப்பிரியர் பிள்ளையார்

    பிள்ளையார் உணவு பிரியர் என்பதால் அவரை சுற்றி எப்போதும் தின்பண்டங்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடியும். அப்படி இந்த விநாயகர் சதுர்த்திக்கு பிள்ளையாருக்கு பிடித்த எந்த உணவுகளை படைக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.

கொழுக்கட்டை

    பிள்ளையாரும் கொழுக்கட்டையும் பிரிக்க முடியாத பந்தம் என்றே கூறலாம். எனவே, பிள்ளையாக்கு வகைவகையான கொழுக்கட்டைகளை படைக்கலாம்.

பழங்கள்

    கொழுக்கட்டைக்கு பிறகு பிள்ளையாருக்கு பிடித்தது பழங்கள். இதனால் வாழைப்பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், ஆப்பிள் ஆகியவற்றை படைத்தது வழிபடலாம்.

இனிப்புகள்

    இனிப்புகள் என்றால் விளையாருக்கு ரொம்ப பிரியம் என்பதால் லட்டு, மைசூர்பாகு போன்ற இனிப்புகளை படைத்து வழிபடலாம்.

தேங்காய்

    இந்து மதத்தில் அனைத்து கடவுள்களுக்கு தேங்காய் வைத்து வழிபடுவது போல் பிள்ளையாருக்கும் தேங்காய் உடைத்து வழிபட்டால் நம் கஷ்டங்கள் அனைத்தும் தேங்காய் போல் உடைந்து தூளாகிவிடும்.

பொரி, அவல்

    பொரி, அவல் எடை குறைவாக இருப்பதால் சிறிது காற்றில் கூட பறந்து விடும். அதே போல் நாமும் ஆசைகளை அடக்கி, மனதை வெறுமைப்படுத்தி, பொரி, அவல் போல் தூய்மையாக இருந்தால் கடவுளை அடையாளம்.

கரும்பு

    கரும்பு கடிப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும் கஷ்டத்தை தாண்டி கடிக்கும் போது அதன் இனிப்பை சுவைக்க முடியும். அதேபோல் இப்போது கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்பதை உணர்த்தும் விதமாக கரும்பு படைக்கப்படுகிறது.