முருகன் அருளால் தொட்டதெல்லாம் துலங்க தைப்பூச வழிபாட்டு முறைகள்
Alagar Raj AP
07-02-2025, 17:53 IST
www.herzindagi.com
தைப்பூசம்
தை மாதத்தில் வரும் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளை தான் தான் நாம் தைப்பூசமாக கொண்டாடுகிறோம். இந்த தினம் முருகப்பெருமானுக்கு உகந்த சக்தி வாய்ந்த விரதங்களில் ஒன்று.
தைப்பூச சிறப்புகள்
முருகப்பெருமான் அசுரர்களை அழித்து தேவர்களை காக்க அன்னை பராசக்தியிடம் ஞானவேல் பெற்ற தினம் தான் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.
2025 தைப்பூசம்
2025 ஆம் ஆண்டிற்கான தைப்பூசம் வரும் பிப்ரவரி 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. பிப்ரவரி 10, மாலை 06:01 மணிக்கு தொடங்கும் பூசம் நட்சத்திரம் பிப்ரவரி 11, மாலை 06:34 மணிக்கு முடிவடைகிறது.
விரதம்
அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதத்தை தொடங்கலாம். விரதத்தை முடிக்கும் போது அரோகரா கோஷம் போட்டு முடிக்கவும்.
விரதத்தின் நன்மை
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தைப்பூச தினத்தில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
வழிபாட்டு முறை
முருகன் சிலை பால் அபிஷேகம் செய்யலாம். இல்லையெனில் ஓர் டம்ளர் பால் வைத்து வழிபடலாம். முருகனுக்கு நெய்வேதியமாக ஏதாவது ஒரு இனிப்பு பண்டத்தை படைத்து வழிபடலாம். இப்படி வழிபட்டால் துன்பங்கள் நீங்கும் செல்வ வளம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வேல் வழிபாடு
தைப்பூச நாளில் முருகனுக்குரிய வேலை வழிபட்டால் வறுமை நீங்கி செல்வம், வசதி வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.