வாரணாசியில் கொண்டாடப்படும் சாம்பல் ஹோலியின் சிறப்புகள்
Alagar Raj AP
10-03-2025, 14:57 IST
www.herzindagi.com
ஹோலி பண்டிகை
வட மாநிலங்களில் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றான ஹோலி பண்டிகை நடப்பாண்டில் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசி உற்சாகமாக கொண்டாடுவார்கள்.
மசான் ஹோலி
மசான் ஹோலி என்பது வாரணாசியில் கொண்டாடப்படும் ஒரு தனித்துவமான ஹோலி பண்டிகையாகும். இங்கு வண்ண பொடிகளுக்கு பதிலாக சாம்பலை ஒருவருக்கொருவர் பூசி பண்டிகையை கொண்டாடுவார்கள்.
மரணத்தின் பண்டிகை
வண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சியின் பண்டிகையாக ஹோலி கொண்டாடப்படுகிறது. ஆனால் மசான் ஹோலி என்பது மரணத்தின் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
முக்கியத்துவம்
மக்கள் வாழும் காலத்தில் பேராசை, தீய குணங்கள், ஈகோ போன்று ஆடாத ஆட்டம் ஆடினாலும் இறுதியில் சாம்பல் மட்டுமே மிஞ்சும் என்பதை உணர்த்தும் விதமாக மசான் ஹோலி வாரணாசியில் கொண்டாடப்படுகிறது.
சிவன் மற்றும் பார்வதி
சிவன் மற்றும் பார்வதி திருமணத்திற்குப் பிறகு வாரணாசிக்கு வந்து ஒருவருக்கொருவர் சாம்பலை பூசிக் கொண்டு ஹோலி கொண்டாடினர் என்று இந்து புராணங்களின்படி கூறப்படுகிறது.
சிவனின் கொண்டாட்டம்
இந்து புராணங்களின்படி, சிவபெருமான் மரணத்தின் கடவுளான எமனை தோற்கடித்த பிறகு அந்த சாம்பலை வைத்து ஹோலியை கொண்டாடியதாக நம்பப்படுகிறது.
மசான் ஹோலி எப்போது?
ஒவ்வொரு ஆண்டும் மசான் ஹோலி 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளில் மக்கள் சாம்பலை சேகரித்து, இரண்டாவது நாளில் மசான் ஹோலி கொண்டாடுவார்கள். நடப்பாண்டிற்கான மசான் ஹோலி மார்ச் 10 மற்றும் 11 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.