சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையில் சாமி கும்பிட நல்ல நேரம் மற்றும் வழிபாட்டு முறை
Alagar Raj AP
07-10-2024, 13:42 IST
www.herzindagi.com
பெண் தெய்வங்களின் திருநாள் நவராத்திரி
இந்து மத நம்பிக்கையின் படி பெண் தெய்வங்களை வணங்கும் காலமாக நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மனையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபாடு செய்வது நடைமுறை.
சரஸ்வதி பூஜை
கல்விக்கு உகந்த தெய்வம் சரஸ்வதி தேவி என்பதால் இந்த நாளில் புத்தகங்கள் மற்றும் எழுது கோள்களை வைத்து வழிபடுவது வழக்கம்.
ஆயுத பூஜை
பழங்காலத்தில் எதிரிகளை ஆயுதங்களால் வெல்லவே ஆயுத பூஜை செய்யப்பட்டது. தற்போது நவீன காலத்தில் ஆயுத பூஜை என்பது நம் தொழிலுக்கு உதவும் கருவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.
தேதி
2024 அக்டோபர் 3ஆம் தேதி நவராத்திரி தொடங்கிய நிலையில் அக்டோபர் 11ஆம் நவராத்திரி நிறைவு பெறுகிறது. இந்த நாளே சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையாக கொண்டாடப்படுகிறது.
நல்ல நேரம்
அக்டோபர் 11ஆம் தேதியான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நாளில் மதியம் 12:15 முதல் மதியம் 01:15 வரை நல்ல நேரம் உள்ளது. மாலை 04:45 முதல் மாலை 05:45 வரை நல்ல நேரம் உள்ளது.
வழிபாட்டு முறை
உங்கள் கருவிகள், வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்களை சுத்தம் செய்து அவற்றின் மீது குங்குமம், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றை திலகமிட்டு வழிபடுங்கள். அதே போல் உங்கள் நோட்டு புத்தங்களை சரஸ்வதி தேவியிடம் சமர்ப்பித்து வழிபட வேண்டும்.
சரஸ்வதி தேவியின் அருள்
இவ்வாறு செய்து வழிபட்டால் குழந்தைகளின் கல்விக்கு சரஸ்வதி தேவி என்றென்றும் துணையாக இருப்பார், வாழ்க்கை தரமும் உயரும் என்பது நம்பிக்கை.