மகா கும்பமேளா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்


Alagar Raj AP
08-01-2025, 20:03 IST
www.herzindagi.com

2025 மகா கும்பமேளா

    2025 மகா கும்பமேளா ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை மொத்தம் 44 நாட்கள் நடைபெறவுள்ளது.

144 ஆண்டுகளுக்கு பிறகு

    144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா என்பதால் இந்த நிகழ்வு மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.

புராணம்

    மகாவிஷ்ணு அமிர்தம் அடங்கிய கலசத்தை தூக்கி வீசும் போது அதிலிருந்து சிதறிய நான்கு துளிகள் பூமியில் விழுந்தது. அந்த நான்கு துளிகளில் உருவான நகரங்கள் தான் ஹரித்வார், பிரயாக்ராஜ், உஜ்ஜைன் மற்றும் நாசிக் என்று அழைக்கப்படுகிறது.

பிரயாக்ராஜ்

    உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் தான் மகா கும்பமேளா நடைபெறுகிறது.

நான்கு கும்பமேளா

    மக் கும்பமேளா ஆர்த் கும்மேளா, பூர்ண கும்பமேளா, மற்றும் மகா கும்பமேளா என மொத்தம் நான்கு வகையான கும்பமேளாக்கள் உள்ளன.

ஆண்டுகள்

    மக் கும்பமேளா ஆண்டுதோறும் நடைபெறும், ஆர்த் கும்பமேளா 6 வருடங்களுக்கு ஒருமுறையும், பூர்ண கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், மகா கும்பமேளா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறும்.

கோடிக்கணக்கானோர்

    2025 மகா கும்பமேளாவில் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுனெஸ்கோ அங்கீகாரம்

    உலகின் மிகப் பெரிய விழாவாகவும், அதிகமான மக்கள் கூடும் விழாவாகவும் யுனெஸ்கோவால் கும்பமேளா விழா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.