மதுரை மீனாட்சியம்மன் தெப்பத் திருவிழா வரலாற்று சிறப்புகள்


Alagar Raj AP
22-01-2025, 16:12 IST
www.herzindagi.com

தெப்பத் திருவிழா

    கோவில் நகரமான மதுரையில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். அதில் சித்திரை திருவிழாவிற்கு அடுத்தபடியாக மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா.

தைப்பூச பௌர்ணமி

    மதுரை, வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பத்தில் ஆண்டுதோறும் தைப்பூச பௌர்ணமியன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்.

திருமலை நாயக்கர்

    மன்னர் திருமலை நாயக்கர் தனது அரண்மனையை கட்டுவதற்கு அதிகளவில் மணல் எடுக்கும் போது பள்ளம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியை சீரமைக்க எண்ணிய திருமலை நாயக்கர் சதுர வடிவில் வெட்டி தெப்பக் குளத்தையும் அதன் நடுவில் வசந்த மண்டபத்தையும் கட்டினார்.

முக்குறுணி விநாயகர்

    இங்கு தெப்பம் அமைக்கும் போது கண்டெடுக்கப்பட்ட முக்குறுணி விநாயகர் சிலையை மீனாட்சி அம்மன் கோவிலில் வைத்து திருமலை நாயக்கர் வழிபட்டார்.

தெப்பத்திருவிழா

    தெப்பக் குளத்தை கட்டிய திருமலை நாயக்கர் தன் பிறந்தநாளில் குளத்தை திறந்து தெப்ப உற்சவத்தை நடத்தி மீனாட்சி சுந்தரேஸ்வரரை தெப்பக்குளத்தில் எழுந்தருளச் செய்து மகிழ்ந்தார்.

மன்னரின் பற்று

    சுவாமியும், அம்பாளும் வெள்ளி சிம்மாசனத்தில் தெப்ப உலா வந்தாலும், மீனாட்சி அம்மன் மீதிருந்த பற்று காரணமாக திருமலை நாயக்கர் அம்பாளுக்கு சிம்மாசனத்தின் மேல் கூடுதலாக ஒரு அவுதா அமைத்து வெகு விமர்சையாக உற்சவத்தை நடத்தினர்.

மாறாத வழக்கம்

    தெப்பத் திருவிழாவில் சுவாமி வெள்ளி சிம்மாசனத்தில் வரும்போது மீனாட்சியம்மன் மட்டும் வெள்ளி சிம்மாசனத்துடன் அவுதா தொட்டியில் வரும் நடைமுறை தற்போது வரை பின்பற்றப்படுகிறது.

தெப்பக்குளம்

    1000 அடி நீளமும் 950 அடி அகலமும் கொண்டு சதுரமாக உள்ள தெப்பக்குளத்தின் ஆழம் 29 அடியாகவும் நீர்க் கொள்ளளவு 115 கனஅடியாகவும் உள்ளது.

கட்டிடக்கலை

    கட்டிடக் கலையின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திருமலை நாயக்கர் குளத்தின் நடுவே உள்ள வசந்த மண்டபத்தின் வெளிப்புறத்தை பல்லவ கட்டிடக்கலை பாணியிலும் உட்புறத்தை முகலாய கட்டிடக்கலை பாணியிலும் கட்டினார்.