இறை வழிபாடும் விளக்கேற்றும் வழிமுறைகளும்!


Jansi Malashree V
03-07-2024, 12:50 IST
www.herzindagi.com

விளக்கின் மகிமை:

    நாம் பார்க்கும் இடமெல்லாம் ஒளி ரூபத்தில் இறைவன் இருக்கிறான் எனவும், வாழ்க்கையில் இருள் மறைந்து வெளிச்சம் உண்டாக வேண்டும் என்பதற்காக அனைத்து வீடுகளில் விளக்கு ஏற்படுகிறது.

அகல் விளக்கு:

    நம்முடைய மூதாதையர்கள் முன்பெல்லாம் இறைவனை வழிபடுவதற்கு அகல் விளக்குகளை மட்டும் தான் பயன்படுத்திவந்தனர்.

குத்து விளக்கு:

    அகல் விளக்கிற்கு அடுத்த படியாக அனைவரது வீடுகளிலும் குத்துவிளக்குகள் ஏற்றினர். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்குகளைப் பெண்கள் ஏற்றும் போது அன்பு, மன உறுதி, சகிப்புத்தன்மை, பாசம், அரவணைப்பு என அனைத்தையும் பெற வேண்டும் எனவும் ஒளி தீபத்தில் இறைவன் அருள் கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது.

காமாட்சி விளக்கு:

    வீடுகளில் காமாட்சி விளக்குகளை ஏற்றி வழிபடுவதால், வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்கி மங்கலத்தை உண்டாக்கும் என்பது ஐதீகம்.

விளக்கேற்றும் திசைகள்:

    தெற்கு திசையைத் தவிர்த்து மற்ற மூன்று திசைகளிலும் விளக்கேற்றலாம். கிழக்கு திசை மங்களத்தைக் கொடுப்பதாகவும், மேற்கு திசை கடன்களைத் தீர்க்கும் எனவும், வடக்கு திசையில் விளக்கேற்றுவது திருமண தடை நீங்கும் எனக்கூறப்படுகிறது.