சப்பாத்தி பஞ்சு போல் உப்பி வர வேண்டுமா? இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க
S MuthuKrishnan
27-01-2025, 07:00 IST
www.herzindagi.com
சப்பாத்தி உப்பி வர கோதுமை மாவை எப்படி பிசைய வேண்டும்? சப்பாத்தி மென்மையாக வர என்ன செய்ய வேண்டும்? போன்ற உங்களது சந்தேகங்களுக்கு இந்த மாதிரி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப் தண்ணீர் - 1/2 கப் உப்பு - 1/4 டீஸ்பூன் சர்க்கரை - 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
முதலில் ஒரு கப் கோதுமை மாவு எடுத்துக் கொள்ளவும். பிறகு, அதே கப்பில் 1/2 கப் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் முதலில் மாவு சேர்க்கவும். அவற்றுடன் எண்ணெய் அல்லது நெய் ஒரு ஸ்பூன் சேர்க்கவும். பிறகு தண்ணீர் சேர்த்து மாவை பிசைந்து கொள்ளவும்.
ஒரு உருண்டை மாவை கையில் நன்றாக உருட்டி அழுத்தி, கோதுமை மாவில் தோய்த்து, பின் சப்பாத்திக் கட்டையால் லேசாக, அழுத்தம் கொடுக்காமல் தேய்க்கத் தேய்க்க மாவு உருண்டை அப்பள சைஸில் வரும்போதே தானாகவே வட்டமாக நகர ஆரம்பிக்கும். அடிக்கடி கோதுமை மாவில் தோய்த்துக்கொள்ள வேண்டும்.
அப்போதுதான் கட்டையில் ஒட்டாமல் வட்டமாக நகரும். இதனால் நடுவிலும் ஓரங்களிலும் ஒரே அளவாக கிடைக்கும். நடுவில் குழிவாகவோ அல்லது மாவு மடங்கியோ இடப்பட்டால் சப்பாத்தி நல்ல உப்பலாக வராது.
தவா நல்ல சூடானதும் இட்ட சப்பாத்தி மாவைப் போடவும்.லேசாக பச்சை தன்மை போய் சிறு சிறு வெள்ளைக் கொப்புளங்களாக வந்தவுடன் திருப்பிப் போடவும்.
சப்பாத்தியில் எண்ணெய் விட்டு அடுப்பில் நெருப்பை பெரிதாக்கி திருப்பிப் போட தவாவின் சூட்டில் நன்றாக பூரி போல் முழுவதும் உப்பலாக வரும்.