எது நல்ல பேரீச்சம்பழம்? பேரீச்சம்பழம் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்..!
Alagar Raj AP
17-04-2024, 14:00 IST
www.herzindagi.com
பலரும் விரும்பி சாப்பிடும் உலர் பழங்களில் முக்கியமானது பேரிச்சம்பழம். இதில் வைட்டமின், கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. நாம் பேரீச்சம்பழத்தை வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில குறிப்புகளை இங்கே காண்போம்.
ஈக்கள், எறும்புகள், பூச்சிகள் மொய்க்கும் பேரீச்சம்பழத்தை வாங்க வேண்டாம். அது காலாவதியான பெர்ச்சம்பிளமாக இருக்கும்.
பேரீச்சம்பழத்தை நுகர்ந்து பாருங்கள். இனிப்பான சுவை போல் வாசனை அடித்தால் அவைகளை வாங்கலாம். மதுபானம் போன்ற வாசனை அடித்தால் அவை காய்ந்த பேரீச்சம்பழமாக இருக்கும். எண்ணெய் பசை வாசனை அடித்தால் பளபளப்பிற்கு ரசாயனம் தடவப்பட்டிருக்கும்.
பழைய பேரிச்சம்பழம் என்றால் உள்ளே சிவப்பு நிறத்தில் இருக்கும். பேரீச்சம்பழத்தின் உட்புறம் வெண்மையாக இருந்தால் அது நல்லது என்று புரிந்து கொள்ளலாம்.
நல்ல உலர்ந்த பேரீச்சம்பழங்களை வாங்குங்கள். ஈரமான பேரீச்சம்பழங்கள் உலர்ந்த பேரீச்சம்பழங்களை விட சீக்கிரம் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
வெளியே திறந்த வெளியில் விறக்கப்படும் பேரீச்சம்பழங்களை வாங்குவதை விட பாக்கெட்டில் அல்லது டப்பாவில் அடைக்கப்பட்டுள்ள நன்கு அறிந்த பிராண்டின் பேரீச்சம்பழங்களை வாங்குங்கள்.
பேரீச்சம்பழம் வாங்கும் முன் அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பாருங்கள். பொதுவாக பேரீச்சம்பழகள் ஒன்றரை ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும்.