மீந்த போன இட்லி மாவில் சூப்பரான கேக் ருசிக்கலாம்


Raja Balaji
20-02-2025, 23:04 IST
www.herzindagi.com

இட்லி கேக் செய்ய தேவையானவை

    இட்லி மாவு, முந்திரி பருப்பு, வெல்லம், தேங்காய் துருவல், நெய், உலர் திராட்சை

இட்லி கேக் செய்முறை

    கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி 20 முந்திரி, 20 உலர் திராட்சை போட்டு வறுத்தெடுங்கள்.

    அதே நெய்யில் கால் கப் ரவை போட்டு வறுத்தெடுக்கவும்.

    இதனிடையே அரை கப் வெல்லத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தி கரைத்து வெல்லப் பாகு தயாரிக்கவும்.

    இப்போது ஹார்ட் வடிவம் உள்ள பாத்திரத்தில் நெய் தடவி இட்லி வேக வைக்க தயாராகுங்கள். இதில் இரண்டு கப் இட்லி மாவு, வறுத்த முந்திரி-திராட்சை, வெல்லப் பாகு, அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கவும்.

    இட்லி குக்கரில் பாதியளவு தண்ணீர் நிரப்பி பாத்திரத்தை வைத்து ஆவி பறக்க வேகவிட்டு எடுத்தால் சூப்பரான இட்லி கேக் ரெடி.