பருத்திப்பால் குடிங்க புஷ்டியாக மாறுங்க; ஊட்டச்சத்து அதிகம்


Raja Balaji
19-02-2025, 19:18 IST
www.herzindagi.com

பருத்தி பால் செய்ய தேவையானவை

    பருத்தி விதை, தேங்காய் பால், பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், சுக்கு

பருத்தி பால் செய்முறை

    ஒரு கப் பருத்தி விதையை நன்கு கழுவி தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊறவைக்கவும்.

    பருத்தி பால் செய்யும் முன்பாக் கால் கப் பச்சரிசியை கழுவி இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.

    ஊறிய பருத்தி விதைகளை வடிகட்டி மிக்ஸியில் தண்ணீர் ஊற்றி அரைத்து எடுக்கவும். தேங்காய் பால் எடுப்பது போல இரண்டு முறை செய்யவும். ஊறிய பச்சரிசியையும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

    கடாயில் இவை இரண்டையும் சேர்த்து நன்கு கலந்துவிட்டு 15 நிமிடங்களுக்கு சூடுபடுத்தவும்.

    இதோடு முக்கால் கப் வெல்லம், கொஞ்சமாக ஏலக்காய் தூள் சேருங்கள். வெல்லம் நன்கு கரைந்து பருத்தி பாலின் நிறம் மாறட்டும். இறுதியாக அரை கப் தேங்காய் துருவல் போட்டு குடிக்கவும்.