ஒரு முட்டை, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மிளகு தூள், உப்பு, மஞ்சள் தூள், நல்லெண்ணெய்
கரண்டி ஆம்லெட் செய்வதற்கு முக்கியமாக கொஞ்சம் பெரிய தாளிப்பு கரண்டி தேவை
கரண்டி ஆம்லெட் செய்முறை
தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்று சூடுபடுத்தவும்.
இதனிடையே ஒரு பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கவும். அதனுடன் ஒரு மிளகாயை சிறிதாக வெட்டவும்.
இவற்றுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகு தூள், தேவையான அளவு உப்பு போட்டு ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கலக்கிவிடுங்கள்.
இப்போது கரண்டியில் ஆமெல்ட் ஊற்றவும். இருபுறமும் முட்டை வெந்திட ஸ்பூன் பயன்படுத்திங்கள். இப்படி செய்தால் போண்டா சைஸில் மதுரை பேமஸ் கரண்டி ஆம்லெட்டை ருசிக்கலாம்.