உரித்த பூண்டை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்துவோர் கவனத்திற்கு..!
Alagar Raj AP
19-06-2024, 14:05 IST
www.herzindagi.com
நம்மில் பலருக்கும் உரித்த பூண்டை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து அதை தேவைப்படும் போது பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். இப்படி செய்வதால் பூண்டில் பூஞ்சை வளர்ச்சி அபாயம் ஏற்படும்.
ஈரப்பதம்
குளிர்சாதன பெட்டி ஈரப்பதமான சூழலில் இருப்பதால் பூண்டை காற்று புகாதா டப்பாவில் அடைத்து வைக்காவிட்டால் ஈரப்பதம் காரணமாக பூண்டில் பூஞ்சை வளர்ச்சி ஏற்படும்.
ஆக்சிஜனேற்றம்
பூண்டு உரிக்கப்பட்டவுடன், அது ஆக்சிஜனேற்றத்திற்கு மிக எளிதில் பாதிக்கப்படும். இதனால் பூண்டு சுலபமாக கெட்டுப்போகும்.
அசுத்தம்
மற்ற காய்கறிகள் வைத்த டப்பா அல்லது அசுத்தமான டப்பாவில் உரித்த புன்டை வைத்தால் பூண்டு எளிதில் கெட்டுப்போகும்.
காற்றுப்புகாத டப்பா
காற்றுப்புகாத டப்பாவில் உரித்த பூண்டை போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்தால் பூண்டு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
வினிகர்
நீங்கள் பூண்டை சேமிக்கும் டப்பாவில் ஆப்பிள் சைடர் வினிகரை ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து ஏழு முதல் பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
பூண்டை உரித்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்துவதற்கு பதில் அன்றன்றைக்கு உரித்து பயன்படுத்தினால் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாது.