இந்த உணவுகளை மிக்ஸியில் போட்டு எக்காரணத்தை கொண்டும் அரைக்காதீங்க!
Alagar Raj AP
21-02-2024, 16:00 IST
www.herzindagi.com
சூடான திரவங்கள்
சூடான திரவங்களை மிக்ஸியில் பயன்படுத்தினால் அதில் இருந்து சூடான நீராவி வெளியேற வழியில்லாமல் வெடிக்க வாய்ப்புள்ளது.
உருளைக்கிழங்கு மற்றும் இஞ்சி
உருளைக்கிழங்கு மற்றும் இஞ்சியை மிக்ஸியில் வைத்து அரைத்தால் இதில் உள்ள நார்ச்சத்துள்ள பிரிந்துவிடும். இதனால் உடலுக்கு நன்மை பயக்கும் பண்புகள் மற்றும் சுவையை இழக்க வாய்ப்புள்ளது.
மசாலா பொருட்கள்
வீட்டில் புதிதாக மசாலாப் பொருட்களை வறுக்கவும் அரைக்கவும் சிலர் மிக்ஸியை பயன்படுத்துவார்கள். இவ்வாறு செய்வதால் மசாலா பொருட்கள் மென்மையாக அரையாது. மேலும் அரைக்கும் நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும்.
ஐஸ் கட்டிகள் அல்லது உறைந்த பொருட்கள்
ஐஸ் கட்டிகள் அல்லது உறைந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்தால் ஐஸ் கட்டிகளின் அதிகப்படியான திடம் காரணமாக மிக்ஸி பிளேடுகள் உடைய வாய்ப்புள்ளது.
அதிக மணம் கொண்ட உணவுகள்
பூண்டு, இஞ்சி மற்றும் மிளகாய் போன்ற கடுமையான மணம் கொண்ட அல்லது காரமான உணவுகளை அரைத்தால் மிக்ஸியில் அதன் மணம் நீடித்து இருக்கும், இதனால் மற்ற உணவுகளை அதில் அரைக்கும் போது அதன் சுவை மாற வாய்ப்புள்ளது. இதனால் கடுமையான மணம் கொண்ட உணவுகளை அரைத்த பின்னர் நன்றாக கழுவவும்.
மாவு
சிலர் மாவு அரைப்பதற்கு மிக்ஸ்சி பயன்படுத்துவார்கள். இதனால் மாவு சரியான நிலை தன்மையை அடைய அதிக நேரம் எடுக்கும்.
கார்பனேற்றப்பட்ட பானங்கள்
சோடா போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்கள் மிக்ஸியில் ஊற்றி அரைத்தால் அழுத்தம் காரணமாக வெடிக்கும் ஆபத்து உள்ளது.