கோதுமை மாவு சேமித்து வைக்கப்படும் பாத்திரம் அல்லது பையில் கிராம்பு, கல் உப்பு, கற்பூரம், வேப்பிலை வைத்தால் அதன் வலுவான வாசனை காரணமாக பூச்சிகள் கோதுமை மாவை தாக்காது.
கோதுமை அல்லது அதை சேமித்து வைக்கும் பாத்திரம் ஈரப்பதமாக இருந்தால் அதில் சேமிக்க வேண்டாம். ஏனெனில் ஈரப்பதம் காரணமாக, வண்டுகள், பாக்டீரியா, பூஞ்சை போன்றவை பரவ வாய்ப்புள்ளது.
கோதுமையை அதிக நாள் ஒரே இடத்தில் வைத்தால் கெட்டுப்போகும், இதை தவிர்க்க மாதத்திற்கு ஒரு முறை கோதுமையை வெயிலில் காய வையுங்கள்.
வண்டுகள் தாக்கிய பழைய கோதுமை மாவுடன் புது கோதுமை மாவை சேர்க்க கூடாது. அப்படி சேர்த்தால் புதிய கோதுமை மாவிலும் வண்டுகள் தாக்கும்.
நீங்கள் கோதுமை மாவை சேமித்து வைக்கும் டப்பா அல்லது பாத்திரம் காற்று புகாதவாறு இருந்தால் வண்டுகள் தாக்காது.
கோதுமை மாவு வாங்கியதும் அதை பாக்கெட்டுடன் தரையில் வைக்க வேண்டாம். நிலத்தின் ஈரப்பதத்தால் கோதுமை மாவு கெட்டுப்போக வாய்ப்புள்ளது. எனவே தரையில் இருந்து உயரமான இடத்தில் வைக்கவும்.
கோதுமை மாவை சேமிக்க ஏற்கனவே பழைய கோதுமை மாவை சேமித்து வைத்த பாத்திரத்தை பயன்படுத்துவதாக இருந்தால் மாலத்தியான் எனும் பூச்சிக்கொல்லியை ஒரு துளி நீரில் கலந்து அதை கொண்டு பாத்திரத்தை கழுவி காய வைத்து அந்த பாத்திரத்தை பயன்படுத்தலாம்.