உருளைக்கிழங்கில் பச்சை திட்டுகள் இருந்தால் அவற்றை சாப்பிடலாமா?
Alagar Raj AP
11-07-2024, 14:44 IST
www.herzindagi.com
நீங்கள் பார்த்திருக்கலாம் ஒரு சில உருளைக்கிழங்கில் பச்சை திட்க்டுகள் இருக்கும், அந்த பிச்சை திட்க்டுகள் எதனால் ஏற்படுகிறது, அப்படி பச்சை திட்க்டுகள் உள்ள உருளைக்கிழங்கை சாப்பிடுவது நல்லதா என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பச்சை நிறத்திற்கு காரணம்?
உருளைக்கிழங்கு நேரடியாக சூரிய ஒளியில் படும் போது அவற்றில் குளோரோபில் உற்பத்தி துரிதப்படுத்துகிறது. இதனால் தான் உருளைக்கிழங்கில் பிச்சை திட்க்டுகள் ஏற்படுகிறது. குளோரோபில் என்பது தாவரங்கள் மற்றும் பச்சை காய்கறிகளுக்கு பிச்சை நிறத்தை அளிக்கும் இயற்கையான கலவையாகும்.
இவை பாதுகாப்பானதா?
உருளைக்கிழங்கில் குளோரோபில் அதிகரித்து பச்சை நிறமாக மாறும் போது, சோலனைன் கலவையும் உருளைக்கிழங்கில் அதிகரித்திருக்கலாம். இது உருளைக்கிழங்கில் கசப்பான சுவையை ஏற்படுத்தும் மற்றும் சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு கூட வழிவகுக்கும்.
பக்க விளைவுகள்
பச்சை திட்டுகள் உள்ள உருளைக்கிழங்கை அதிகமாக சாப்பிடும்போது குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகள், தலைவலி மற்றும் நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
எப்படி பயன்படுத்தலாம்?
உருளைக்கிழங்கில் பச்சை திட்க்டுகள் உள்ள பகுதியை மட்டும் அகற்றிவிட்டு பிற பகுதியை தாராளமாக பயன்படுத்தலாம்.
பச்சையாக மாறாமல் தடுக்க...
உருளைக்கிழங்கு பச்சை நிறமாக மாறுவதை தடுக்க அவற்றை நேரடியாக சூரிய ஒளியில் படும்படி வைக்காதீர்கள். இருண்ட இடத்தில் வைப்பது பாதுகாப்பானது.
எனவே அடுத்த முறை உருளைக்கிழங்கு வாங்கும் போது பச்சை நிற திட்டுகள் இல்லாத உருளைக்கிழங்கை வாங்கி பயன்படுத்துங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு ஹெர் ஜிந்தகி பக்கத்தில் இணைந்திருங்கள்.