அசத்தலான அக்கி ரொட்டி செய்வது எப்படி ?


Raja Balaji
09-05-2025, 08:55 IST
www.herzindagi.com

அக்கி ரொட்டி முக்கிய பொருட்கள்

    அரிசி மாவு, குடை மிளகாய், வெங்காயம், கேரட், தேங்காய், பாலாடை, பூண்டு, மிளகாய் தூள்

அக்கி ரொட்டி செய்முறை

    400 கிராம் அரிசி மாவுடன் தேவையான அளவு உப்பு மூன்று பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கி போடவும்.

    அதனுடன் ஒன்றரை ஸ்பூன் இஞ்சி, ஒரு நறுக்கிய குடை மிளகாய், ஒரு நறுக்கிய வெங்காயம், அரை மூடி துருவிய தேங்காய், கொஞ்சம் கொத்தமல்லி, அரை ஸ்பூன் பெருங்காயம் சேர்க்கவும்.

    மாவிற்கு ஈரப்பதம் கொடுக்க ஐந்து ஸ்பூன் பாலேடு மிக்ஸ் செய்யவும். அரை லிட்டர் தண்ணீர் சூடுபடுத்தி அதை அரிசி மாவில் ஊற்றி சப்பாத்தி மாவு போல பிசையவும்.

    15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். வாழை இலையில் கொஞ்சம் நெய் தடவி அதில் அரிசி மாவை தட்டி சப்பாத்தி சைஸிற்கு கொண்டு வரவும்.

    தோசைக்கல் சூடான பிறகு தட்டி வைத்திருக்கும் அக்கி ரொட்டி மாவை நெய் தடவி நன்கு வேக வைத்து திருப்பவும். இறுதியாக பன் மீது ஜாம் தடவுவது போல அக்கி ரொட்டியின் மீது பூண்டு சட்னியை தடவுங்கள்.