பஞ்சு போன்ற இட்லி செய்ய சூப்பரான 7 டிப்ஸ்


Alagar Raj AP
22-11-2024, 18:17 IST
www.herzindagi.com

சுடு தண்ணீர்

    மாவு அரைக்கும் முன் அரிசி மற்றும் உளுந்தை சாதாரண தண்ணீருக்கு பதில் சுடு தண்ணீரில் ஊற வைத்து அரைத்தால் இட்லி மாவு சரியான பதத்தில் வரும்.

ஐஸ் கட்டிகள்

    கிரைண்டரில் மாவு அரைக்கும் போது தண்ணீர் தெளிப்பதற்கு பதில் ஐஸ் கட்டிகளைப் போட்டு அரைத்தால் மாவு மிக மிருதுவாக வரும்.

ஜவ்வரிசி

    ஊற வைத்த அரிசி, உளுந்துடன் ஊற வைத்த ஜவ்வரிசியை கிரைண்டரில் சேர்த்து அரைக்கவும். இப்படி அரைத்த மாவில் இட்லி பூ மாதிரி வரும்.

விளக்கெண்ணெய்

    அரைத்த இட்லி மாவில் கொஞ்சம் விளக்கெண்ணெய் சேர்த்து கலக்கி புளிக்க வைக்கவும். இதில் செய்யப்படும் இட்லி மிருதுவாக இருக்கும்.

உளுந்து

    ஊற வைத்த உளுந்தை எவ்வளவு நைசாக அரைக்கிறமோ அந்த அளவுக்கு இட்லி பஞ்சு போன்று வரும்.

அரிசி

    உளுந்தை அரைப்பது போன்று அரிசியை நைசாக அரைக்காமல் கொரகொரப்பாக அரைக்க வேண்டும். அப்போது தான் இட்லி பட்டு போல சாஃப்ட்டாக வரும்.

எண்ணெய்

    இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதன் பின் மாவு ஊற்றினால் இட்லி ஒட்டாமல் மிருதுவாக அவிஞ்சு வரும்.