பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை குறைக்க ஆல்யா பட்டிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய டிப்ஸ்
Alagar Raj AP
11-10-2024, 16:23 IST
www.herzindagi.com
ஆலியா பட் வெள்ளித்திரையில் தனது அட்டகாசமான நடிப்புக்காக மட்டுமல்லாமல், உடற்தகுதிக்கான அர்ப்பணிப்பிற்காகவும் பேசப்படுபவர். ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டுக்கு 2022ல் பெண் குழந்தை பிறந்தது. அதன் பின் தான் எப்படி உடல் எடையை விரைவில் குறைத்தேன் என்பதை ஆலியா பட் தெரிவித்துள்ளார்.
எளிய உடற்பயிற்சிகள்
பிரசவத்திற்கு பிறகு உடல் செயல்பாடுகளை எளிதாக்க நடைப்பயிற்சி மற்றும் நீட்டுதல் போன்ற குறைந்த தாக்கம் கொண்ட பயிற்சிகளை முதலில் செய்ய தொடங்கினார் ஆல்யா பட்.
யோகா
அதன் பின் உடற்பயிற்சி வழக்கத்தில் யோகாவையும் இணைத்துக்கொண்டார் ஆல்யா பட். யோகா செய்வதால் உடலில் நெகிழ்வுத்தன்மை, வலிமை மற்றும் மனநலம் மேம்படும்.
வலிமை பயிற்சிகள்
அடுத்தகட்டமாக குறைந்த எடையைத் தூக்குவது, புஷ்-அப்கள் மற்றும் குந்துகைகள் போன்ற உடல் எடை பயிற்சிகளை ஆல்யா பட் செய்ய தொடங்கினார். இதன் மூலம் உடலில் வலிமையை அதிகரிக்கும், எடை குறையும்.
ஊட்டச்சத்து மிக்க உணவுகள்
தனது டயட்டில் ஆலியா பட் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சமச்சீரான உணவுகள் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது, நீரேற்றமாக இருப்பது உடற்பயிற்சிக்கு தேவையான ஆற்றலை வழங்கும்.
எடை இழப்புக்கு தாய்ப்பால்
குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவதால் கலோரிகள் எரிந்து உடல் எடை குறையும் மற்றும் கர்ப்பத்திற்கு முந்தைய அளவுக்கு கருப்பை சுருங்க உதவும். இதுவும் ஆலியா பட்டுக்கு உடல் எடையை குறைக்க பங்களித்துள்ளது.
ஓய்வு
பிரசவத்திற்கு பிறகு ஆலியா பட் தனக்கு போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதி செய்துகொண்டார். உடற்பயிற்சியைப் போலவே ஓய்வும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு அவசியம்.
நேர்மறை எண்ணம்
பிரசவத்திற்கு பிந்தைய உடற்பயிற்சி என்பது விரைவான முடிவுகளை தராது என்றாலும் நேர்மறையான எண்ணத்துடன் இருப்பது ஆரோக்கியமான மற்றும் நிலையான வாழ்க்கை படிப்படியாக தரும்.