சிசேரியன் செய்த பிறகு இந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்
Alagar Raj AP
18-08-2024, 10:00 IST
www.herzindagi.com
சிசேரியன் அறுவை சிகிச்சை முறையில் பிரசவித்த பெண்கள் சில வாரங்கள் வரை கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களை இந்த பதிவில் காண்போம்.
குளிப்பதில் கவனம்
பொதுவாக சிசேரியன் செய்த பெண்களை மருத்துவர்கள் குளிக்க அனுமதிக்க மாட்டார்கள். அப்படி அனுமதிக்கும் பட்சத்தில் வயிற்றில் சோப்பு போட்டு அல்லது அதிக அழுத்தம் கொடுத்து தேய்த்து குளிப்பதை தவிர்க்கவும்.
இருமல் மற்றும் தும்மலில் கவனம்
சிசேரியனுக்கு பிறகு தையல்லை எடுக்கும் வரை இருமல் மற்றும் தும்மலின் போது கவனமாக இருக்க வேண்டும். அதிக அழுத்தத்தில் இருமுவது அல்லது தும்முவது வயிற்றில் வலியை உண்டாக்கும்.
ஆடையில் கவனம்
சிசேரியன் செய்த பிறகு இலகுவான, தளர்வான மற்றும் காற்றோட்டமான வசதியான ஆடைகளை அணிவதால் வயிற்றில் பாதிப்பு ஏற்படாது.
பயணத்தில் கவனம்
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்வதற்கு ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்துங்கள். அப்படி காரில் சென்றால் மெதுவாக வாகனத்தை இயக்க வேண்டும். வேகமாக செல்வதால் தையலில் பிரச்சனை வரும்.
எடை தூக்குவதில் கவனம்
சிசேரியனுக்கு பிறகு உங்கள் குழந்தையை விட அதிக எடையை தூக்காதீர்கள். அதிக எடை தூக்குவதால் வயிற்றில் வலி ஏற்படலாம்.
வயிற்றில் தையல்லை பிரித்த பிறகு வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்ப சில வாரங்கள் ஆகும் என்பதால் அது வரை மருத்துவர் அறிவுரையின் பேரில் செயல்படுங்கள்.