கருவில் இருக்கும் குழந்தை விரும்புவது இது தான்..! தாய்மார்கள் தெரிஞ்சுக்கோங்க!


Alagar Raj AP
01-03-2024, 18:00 IST
www.herzindagi.com

    குழந்தை வயிற்றில் இருக்கும் போது தாய்மார்கள் இந்த விஷயங்களை செய்யும் போது குழந்தையால் நீங்கள் செய்யும் செயல்களை உணர முடியும் அந்த செயலை குழந்தை விரும்பும். அது என்ன விஷயங்கள் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தாயின் குரல்

    பொதுவாக 18 வது வாரத்தில் இருந்து குழந்தையின் காதுகள் செயல்படத் தொடங்கிவிடும். உங்கள் குரல் குழந்தைக்கு கேட்கும் என்பதால் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே தாயின் குரலுக்குப் பழகிவிடும்.

மென்மையான தொடுதல்

    கருவில் குழந்தை இருக்கும் போது நீங்கள் மென்மையாக வயிற்றை தேய்ப்பது குழந்தையால் அதை உணர முடியும். தொடுதல் உங்கள் குழந்தைக்கு தூண்டுதலை கொடுத்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.

இனிப்பு உணவுகள்

    நீங்கள் உண்ணும் உண்ணும் போது குழந்தை நகர்வதை உணர்ந்திருப்பீர்கள். ஏனென்றால், நீங்கள் உண்ணும் உணவை கருவிலேயே குழந்தையால் ருசிக்க முடியும். இதனால் அடுத்த முறை இனிப்பான உணவை சாப்பிடும் போது குழந்தையால் இனிப்பு சுவையை ருசிக்க முடியும்.

இனிமையான இசை

    வயிற்றில் இருக்கும் குழந்தை இனிமையான இசையைக் கேட்கும் போதெல்லாம், செரோடோனின் எனப்படும் மகிழ்ச்சி ஹார்மோன் வெளிப்படும். இது குழந்தையதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் என்பதால் மென்மையான இசையைப் போட்டு, உங்கள் குழந்தையுடன் பாடிக்கொண்டே அதை ரசியுங்கள்.

வெதுவெதுப்பான நீரில் குளியல்

    கர்ப்ப காலத்தில் வெதுவெதுப்பான நீரில் குளிக்கும் போது உங்கள் சோர்வை குறைத்து நன்றாக ஓய்வெடுக்க உதவும். மேலும் உங்கள் குழந்தையும் கூட ஓய்வெடுக்க வைக்கும்.

மகிழ்ச்சியான மனநிலை

    கருவில் இருக்கும் குழந்தையால் தாயின் உளவியல் நிலையை உணர முடியும் என்பதால் எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருங்கள், இதனால் உங்கள் குழந்தையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும்.