உலக மாதவிடாய் சுகாதார தினம் 2024: மாதவிடாய் காலத்தில் சுகாதாரமாக இருக்க குறிப்புகள்!


Alagar Raj AP
28-05-2024, 11:32 IST
www.herzindagi.com

உலக மாதவிடாய் சுகாதார தினம்

    மாதவிடாயின் சுகாதார முக்கியத்துவம் மற்றும் சுகாதாரமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக மாதவிடாய் சுகாதார தினம் ஆண்டுதோறும் மே 28 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

மே 28 தேர்ந்தெடுக்க காரணம்

    பொதுவாக மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்கள் இருக்கும். மாதவிடாய் பொதுவாக 5 நாட்களுக்கு நிகழும் என்பதால் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதத்தில் 28 ஆம் தேதி உலக மாதவிடாய் சுகாதார தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

நாப்கின் மாற்றும் நேரம்

    மாதவிடாயின் போது ஒவ்வொரு 4-6 மணி நேரத்திற்கும் சானிட்டரி நாப்கின் அல்லது டம்பான்களை மாற்றுவது இனப்பெருக்க பாதை தொற்று, பூஞ்சை தொற்று போன்ற தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள்

    மாதவிடாயின் போது சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கும் பருத்தி உள்ளாடைகளை அணிவது எரிச்சலை குறைக்கும்.

கைகளை கழுவவும்

    பயன்படுத்திய சானிட்டரி நாப்கின்களை மாற்றிய பின் கைகளை சோப்பு போட்டு கழுவுவது ஈஸ்ட் தொற்று அல்லது ஹெபடைடிஸ் பி போன்ற நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும்.

அப்புறப்படுத்தும் முறை

    சானிட்டரி நாப்கினை குப்பையில் போடும் முன் அதை சரியாக மடித்து ஒரு கவரில் வைத்து கட்டி போட வேண்டும்.

கழுவும் முறை

    மாதவிடாய் காலத்தில் எப்போதும் முன்புறத்தில் கழுவிய பின் பின்புறத்தில் கழுவ வேண்டும். பின்புறத்தில் இருந்து கழுவினால் குடலில் உள்ள பாக்டீரியாக்கள் பெண்ணுறுப்பை பாதிக்கும்.