உங்கள் காதலன் உங்களை திருமணம் செய்து கொள்வாரா இல்லையானு தெரியனுமா?
Alagar Raj AP
27-04-2024, 13:00 IST
www.herzindagi.com
நீங்கள் காதலிக்கும் பெண்ணாக இருந்தால் உங்கள் காதலன் உங்களை திருமணம் செய்து கொள்வாரா இல்லையா என்பதை எப்படி அறியலாம் என்பதை இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகம் பொய் சொல்வது
உங்கள் காதலன் ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் மறைப்பது அல்லது உங்களிடம் பொய் சொல்லிவிட்டு வேறொருவரை சந்திக்கச் செல்வது போன்ற செயல்கள் அவர் உங்களுக்கு உண்மையாக இல்லை என அர்த்தம்.
காதலை ரகசியமாக வைத்திருப்பது
உங்கள் இருவருக்குள் இருக்கும் உறவை பற்றி உங்கள் காதலன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கூறாமல் ரகசியமாக வைத்திருப்பது அவர் விரைவில் உங்களை ஏமாற்றி விட்டு செல்ல போவதை புரிந்துகொள்ளலாம்.
உடல் நெருக்கத்தை மட்டும் விரும்புவது
உங்கள் காதலன் உங்களுடன் உடல் நெருக்கத்தை மட்டுமே விரும்பி, பிற செயல்களில் உங்கள் மேல் அக்கறை இல்லாமல் இருந்தால் அவர் உங்களை பயன்படுத்துகிறார் என்று அர்த்தம். அத்தகைய நபர் மிகவும் ஆபத்தானவராக இருக்கலாம்.
உறவு முடிவடைவதை பற்றி பேசுவது
காதலில் சின்ன சின்ன சண்டைகள் வருவது சகஜம். ஆனால் இப்படிப்பட்ட சின்ன சண்டைகளில் உங்கள் காகாதலன் காதல் உறவு முடிவடைவதைப் பற்றி அடிக்கடி பேசுகிறார் என்றால் அவர் உங்களை பிரிய காரணம் தேடுகிறார் என்று அர்த்தம்.
எதிர்காலத்தை பற்றி பேசாமல் இருப்பது
உங்கள் காதலன் உங்களிடம் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசாமல் இருப்பது. அது குறித்து நீங்கள் பேசும் போது அதிலிருந்து பேச்சை மாற்றுவது போன்ற செயல்கள் உங்கள் காதலன் உங்களுடன் நீண்ட தூரம் பயணிக்க போவதில்லை என அறியலாம்.
ஆர்வமின்மை
உங்கள் காதலன் உங்கள் பேச்சுக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது, உணர்ச்சிகளை புரிந்துகொள்ளாமல் செயல்படுவது, உங்கள் செயல்பாட்டில் அலட்சியமாக இருப்பது அவருக்கு உங்கள் மீது காதல் குறைந்து வருவதன் அறிகுறியாகும்.